ads



தூத்துக்குடியில் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
SDPI.jpg 
தூத்துக்குடி மாவட்டம் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு சிறப்பு கூட்டம் 26/12/2017 செவ்வாய்கிழமை அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் நெல்லை மண்டல பொறுப்பாளர் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாசில் சமீர் அவர்களும், மாவட்ட செயலாளர் ஸ்ரீவை உஸ்மான் அவர்களும், காயல் நகர பொறுப்பாளர் நிசார் அவர்களும் கலந்துகொண்டனர்.

மாவட்ட தலைவரின் தலைமையுரையை தொடர்ந்து மாவட்ட பொதுச்செயலாளர் சம்சுதீன் அவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டிய விசயங்களை விளக்கி கூறினார். 

மாவட்ட செயற்குழுவின் தீர்மானங்கள் :

1> ஆழ்வார்திருநகர் பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசுபடும் விதமாக குறிப்பிட்ட சில இடங்களிலிருந்து கழிவுநீர்கள் மக்கள் புழங்கும் நீர்நிலைகளில் கலப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க அரசின் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய ஆய்வுக்குழு ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

2> சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும் குறைந்தது இரண்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பாக இருக்க வளையங்கள் அமைத்து பராமரிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறது.

3> கட்சியின் செயல்வீரர்களுக்கான அடுத்த மூன்று வருட செயல்வீரர் அடையாள அட்டை வழங்கிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பூர்த்தி செய்யாத கிளைகளில் படிவத்தை விரைந்து பூர்த்தி செய்து வருகின்ற 31/12/2017 ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

4> கட்சியின் வருடாந்திர நிதி திரட்ட அனைத்து கிளைகளிலும் சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்து கட்சியின் செயல்வீரர்கள் அனைவ‌ரின் ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகளை பெற்று கட்சியின் வளர்ச்சிக்காக அதிகமாக நிதி திரட்ட ஏற்பாடுகள் செய்யவேண்டி தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த SDPI கட்சியின் செயல்வீரர்கள் அயராது உழைத்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மாநில செய‌ற்குழு உறுப்பினர் தனது முடிவுரையில் கேட்டுக் கொ‌ண்டார்கள்.

இறுதியாக கட்சியின் மாவட்ட பொருளாளர் மைதீன் கனி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த செயற்குழுவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

தகவல் :

H.சம்சுதீன்,
மாவட்ட பொதுச்செயலாளர்,
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.
29 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top