adsடிச. 30-இல் காந்தி குறித்த அரிய ஆவணப்பட திரையிடல் & காந்திய பொருளாதாரம் குறித்த ஜே.சி.குமரப்பாவின் நூல் விவாதம்! ஊர் மக்களுக்கு அழைப்பு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
12_1.jpg 
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & வாசகர் வட்டம் – காயல்பட்டினம் அரசு பொது நூலகம் இணைவில் வருகின்ற 30.12.2017 அன்று காந்தி குறித்த ஆவணப்பட திரையிடலும் காந்திய பொருளாதாரம் குறித்த நூல் விவாதமும் நடைபெற உள்ளன. இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை :-

சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, திரையிடல், நூலாய்வு & விவாத அரங்கம் என பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் புதிய & மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக "எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு" அமைப்பு விளங்குகிறது.

இவ்வமைப்பின் அடுத்த நிகழ்வாக, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தோடு இணைந்து, வருகின்ற 30.12.2017 சனிக்கிழமை அன்று (இன்ஷா அல்லாஹ்) திரையிடல் & நூலாய்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்தியாவின் இன்றைய தேவை – மகாத்மா காந்தி :

காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில், காலை 09:30 மணி முதல் முற்பகல் 12:00 மணி வரை நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில், மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்திலேயே எடுக்கப்பட்ட அரிய ஆவணப்படத்தின் திரையிடலும் & காந்தியப் பொருளாதாரம் குறித்த ஜே.சி.குமரப்பாவின் "நிலைத்த பொருளாதாரம்" நூல் விவாதமும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில், மூத்த எழுத்தாளரும் & காலச்சுவடு இதழின் துணையாசிரியருமான களந்தை பீர் முஹம்மது சிறப்புரை வழங்குகிறார்.

எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 24-ஆவது நிகழ்வான இது, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் இணைவில் நடைபெறும் 2-ஆவது திரையிடல் நிகழ்வாகும். முன்னதாக, Modern Times & The Man Who Planted Trees ஆகிய இருவேறு ஆங்கிலப் படங்கள், 10.09.2017 ஞாயிற்றுக்கிழமையன்று அங்கு திரையிடப்பட்டன. அந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் ராம் சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நல்லதொரு நிகழ்வில் ஊர் மக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்வு குறித்த கூடுதல் தகவல்களை பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்...

முஜீப், நூலகர் – காயல்பட்டினம் அரசு பொது நூலகம் (9894586729)

சாளை பஷீர் ஆரிஃப், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு (9962841761)

தகவல் :
அ.ர.ஹபீப் இப்றாஹீம்.
28 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top