ads



வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
wwwc.JPG 
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் ‘தமிழ் இலக்கியங்களில் கடல்சார் பதிவுகள்’ என்னும் தலைப்பில் 20.12.17 அன்று நடைபெற்றது. இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் காலை 10.00 மணியளவில் தொடங்கியது. இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.இரா.அருணா ஜோதி M.A., M.Phil., Ph.D. வரவேற்புரை வழங்க, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் க. ஹெலன் M.A., M.Phil., SET. கருத்தரங்க நோக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. தொடக்கவுரையாற்ற, கல்லூரிச் செயலர் ஹாஜி வாவு M.M. மொகுதஸீம் B.A. (CS) வாழ்த்துரை வழங்கினார்.
WW1.jpg 
கல்லூரிச் செயலர் ஹாஜி வாவு M.M. மொகுதஸீம் B.A (CS), கல்லூரி துணைச் செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) இவ்விழாவில் கருத்துரையாளர்களாக கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் புனித யூதா கல்லூரியின் விலங்கியல் துறைப் பேராசிரியரும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளருமான முனைவர் வறீதையா கான்ஸ்ட்ன்டைன், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் கல்வித்துறையின் தலைவரும் மொழியியற் புலத்தைச் சார்ந்த தகைசால் பேராசிரியர் முனைவர் ஆதித்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
பின்னர் கல்லூரிச் செயலர் ஹாஜி வாவு M.M. மொகுதஸீம் B.A. (CS), ஆய்வுக்கட்டுரையின் தொகுப்பான “தமிழ் இலக்கியங்களில் கடல்சார் பதிவுகள்” என்னும் புத்தகத்தை வெளியிட, கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளரான முனைவர். வறீதையா கான்ஸ்டன்டைனும், தகைசால் பேராசிரியர் முனைவர் ஆதித்தனும் பெற்றுக் கொண்டனர்.
 ww2.jpg
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அ.கல்பனா தேவி M.A., M.Phil., SET. சிறப்பு விருந்தினர் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் புனித யூதா கல்லூரியின் விலங்கியல் துறைப் பேராசிரியரும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளருமான முனைவர். வறீதையா கான்ஸ்டன்டைன் அவர்களை அறிமுகப்படுத்தினார்;. தொடர்ந்து முனைவர். வறீதையா கான்ஸ்டன்டைன் தனது கருத்துரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ச.சத்திய பாமா M.A., M.Phil., Ph.D. சிறப்பு விருந்தினர் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் கல்வித்துறையின் தலைவரும் மொழியியற் புலத்தைச் சார்ந்த தகைசால் பேராசிரியர் முனைவர். ஆதித்தன் அவர்களை அறிமுகம் செய்ய முனைவர் ஆதித்தன் தனது கருத்தரங்க உரையாற்றினார்.
 
மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பழங்கால இலக்கியங்களில் கடல்சார் பதிவுகள், இக்கால இலக்கியங்களில் கடல்சார் பதிவுகள் என இரு பிரிவாக கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
 WW3.jpg
நிறைவு விழா மாலை 3.00 மணியளவில் ஆரம்பமானது. கல்லூரி இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி M.A., Ph.D. ஆய்வரங்கக் கருத்தரை வழங்கினார். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் கல்லூரி துணைச் செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) சான்றிதழ் வழங்கினார். திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தி. ஸ்ரீமதி M.A., M.Phil., Ph.D. அவர்களும் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியைச் சார்ந்த மாணவி M. சுமதியும் பின்னூட்டம் வழங்கினர்.
 
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு. ஏஞ்சல் லதா M.A., M.Phil., SET., Ph.D. நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் பல்வேறு கல்லூரியின் பேராசிரியைகளும், மாணவிகளும், கல்லூரியின் பிறதுறை பேராசிரியைகளும் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியைகளும் தமிழ்த்துறை மாணவியரும் செய்திருந்தனர். 
28 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top