ads



பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் SDPI கட்சியின் சார்பாக மனு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
sdp1.jpg 
தூத்துக்குடி மாவட்டம் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கடந்த 15/12/2017 வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்பட்டது.

இந்த கோரிக்கை மனுவில் முக்கியமாக காயல்பட்டினம் பகுதிகளில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விசயமாக காவல்துறை அதிகாரிகளுடன் விரிவாக  விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த விவாதத்தில் காவல்துறை சுமூகமான சூழலை ஏற்படுத்தி தரும் என்று கூறியுள்ளனர்.

முக்கியமாக காயல்பட்டினத்தில் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து சமூக தீமைகளும், சமூக சீர்கேடுகளும் நிலவுவதால் தூத்துக்குடி மாவட்ட போதை தடுப்பு பிரிவு உடணடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போதை தடுப்பு அவசர இலவச அலைபேசி எண்களையும், பொதுமக்கள் தயிரியமாக காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு விரைந்து செயல்பட வழிவகுக்கவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. 

இதனையும் விரைவில் பரிசீலனைக்கு எடுப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு கட்டங்களில் #காயல்பட்டினம் பகுதியில் போதை தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததாகவும் மேலும் போதை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதாகவும் காவல்துறை ADSP அவர்கள் கூறினார்கள்.

இந்த சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட #SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் காயல் சம்சுதீன் அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் ஸ்ரீவை உஸ்மான் மற்றும் காயல் நகர பொறுப்பாளர் நிசார் அவர்களும் கலந்துகொண்டனர். மேலும் SDPI கட்சியின் செயல்வீரர்களும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.

தகவல் :

செய்தி மற்றும் ஊடகத்துறை,
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.
21 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top