வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நூலக புத்தகக் கண்காட்சி 14.12.17 மற்றும் 15.12.17 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. 14.12.17 அன்று காலை அரபி துறை தலைவர் ஆலிமா S.A.K. முத்து மொகுதூம் பாத்திமா M.A.(ARABIC)., M.Phil., கிராத் ஓத, கல்லூரி செயலர் ஹாஜி வாவு M.M. மொகுதஸிம் B.A (CS), அவர்கள் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள்.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் ஜெ. எல்லோரா M.COM., M.Phil., Ph.D. மற்றும் கல்லூரி இயக்குநர் திருமதி Dr. மெர்ஸி ஹென்றி M.A., Ph.D. மற்றும் அனைத்துத் துறைத்தலைவர்களும், உதவி பேராசிரியர்களும் கலந்துக் கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் முனைவர் திருமதி Y. மும்தாஜ் பேகம் B.A., M.L.I.SC., M.Phil., Ph.D. அவர்கள் செய்திருந்தார்கள். இப்புத்தகக் கண்காட்சியில் கல்லூரியில் அனைத்துத்துறை மாணவியரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு புத்தகங்களை வாங்கி பயன் பெற்றுள்ளனர்.
வாசகர்கள் கருத்து