புன்னகை மன்றத்தின் ஒரு புதிய முயற்சியாக 15/12/17 அன்று காலை காயல்பட்டணம் பேருந்து நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள தமிழக அரசு பொது நூலகத்தில் மாணவர்களை புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வமூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காயல்பட்டணம் பேருந்து நிலைய வளாகத்திற்குள் தமிழக அரசு பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. இதன் பொருப்பாளராக காயல்பட்டணத்தை சார்ந்த சகோதரர் மூஜீப் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இவர் தமிழகத்தின் சிறந்த நூலகர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவிளான இடம், வசதி, புத்தகங்கள் கொண்ட நூலகமாக காயல்பட்டணம் அரசு நூலகம் விளங்குகிறது, என்றபோதிலும் இந்த நூலகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையே தொடர்பே இல்லாமல் இருந்தது.

தற்போது மாணவர்கள் இவ்வரிய நூலகத்தை பயன்படுத்தும் வகையில் புன்னகை மன்றம், காயல்பட்டணம் அல்அமீன் பள்ளி நிர்வாகி மற்றும் நூலக பொருப்பாளரிடம் அனுமதி பெற்று மாணவர்களை நூலகத்திற்கு புன்னகை மன்றத்தில் ஏற்பாட்டில் கடந்த 15ஆம் தேதி காலை அல்அமீன் பள்ளி நிர்வாகி ஆசிரியர் புகாரி மற்றும் தலைமை ஆசிரியை சகோதரி அப்ரின் ஆகியோர்களின் தலைமையில் 28 மாணவர்களை மாவட்ட நூலகத்திற்கு அழைத்து வரப்பட்டது.
இதுவரை கண்டிராத நூலத்தை கண்ட மாணவ மாணவிகள் வியந்து போனார்கள். கதை, கார்ட்டூன், ளுpழமநn நபெடiளா என பல புத்தகங்களை ஆர்வமாக படித்தார்கள். நூலகத்தை பயன்படுத்தும் விதத்தை பற்றி நூலகர் முஜீப் அவர்கள் விளக்கினார்.
அல் அமீன் பள்ளியில் இருந்து வருகைதந்த மாணவர்கள் அனைவரும் புன்னகை மன்றத்தின் மூலம் நூலகத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டார்கள். நூலகத்தின் வெளியில் வந்து சந்தோசமாக குழுப்படம் எடுத்து கொண்டார்கள்.

இந்த நிகழ்வு மூலம் வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு நூலகபாடம் ஏற்படுத்தி நூலகத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று அல்அமீன் பள்ளி நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியரிடம் புன்னகைமன்றம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
வாசகர்கள் கருத்து