ads



பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் காயல்பட்டினத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
sdpi1_1.jpg 
ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற முழக்கத்துடன் மாபெரும் விழிப்புணர்வு பிரசாரம் தூத்துக்குடி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக 17/12/17 ஞாயிற்றுகிழமை காயல்பட்டினத்தில் நடைபெற்றது. 

இந்த பிரச்சார இயக்கத்தின் பேரணி மாலை 4.20 மணிக்கு #மகாத்மா காந்தி நினைவு ஆர்ச்சில் துவங்கி கடற்கரையில் நிறைவுற்றது.

இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் A.செய்யது பாசுல் சமீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் உயர்திரு M.சிவலிங்கம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். 

தூத்துக்குடி ஜிம் மாஸ்டர் R.K ராமன், மாற்றுத்திறனாளிகள் சங்கம் மாவட்ட நிர்வாகி காயல் M.I.முஹம்மது தீபி அவர்கள், திருச்செந்தூர் ஜிம் மாஸ்டர் S.ஜெகன் அவர்கள், T.லிங்கம் சமூக ஆர்வலர் அவர்கள், புதிய விடியல் பத்திரிக்கையின் துனை ஆசிரியர் M.S.அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சி மாவட்ட தலைவர் M.ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி அவர்களும், SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் காயல் H.சம்சுதீன் அவர்களும், தேசிய மாணவர் அமைப்பான CFI யின் மாவட்ட தலைவர் M.ரூமான் அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் காயல்பட்டினம் நகர நிர்வாகி K.நிஸார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரோக்கியத்தை வலியுறுத்தி கராத்தே / யோகா / ஜிம்னாஸ்டிக் / சிலம்பு போன்ற வீர விளையாட்டுகள் பொதுமக்களுக்கு டெமோ செய்து காண்பிக்கப்பட்டது.
திரளாக மாணவர்கள் / குழந்தைகள் / பெண்கள் / சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
sdpi2.jpg
நிகழ்ச்சியில் இறுதியாக வீர விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

தகவல் :
K.நிஸார்,
நகர பொறுப்பாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
காயல்பட்டினம் - தூத்துக்குடி மாவட்டம்.
18 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top