ads



"விரைவில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டி". நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மற்றும் நகராட்சி ஆணையரிடம் நகர் நல மன்றம் கோரிக்கை!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KNNM Logo.jpg 
காயல்பட்டணம் திருச்செந்தூர் சாலை, கே.எம்.டி.மருத்துவமனை அருகே காயிதேமில்லத் நகர், பிரதான சாலை சந்திப்பில் இன்று (14/12/2017) நடந்த விபத்தில் 13 வயது சிறுவன் படுகாயமடைந்து திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான்.

மேற்குறிப்பிட்ட அந்த இடத்தில் பலமுறை விபத்துகள் நடந்துள்ளது. இது சம்பந்தமாக காக்கும்கரங்கள் மற்றும் நகர் நல மன்றம் சார்பாக, திருச்செந்தூரிலுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் சென்று அந்த பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதோடு, அவ்வமைப்பின் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்கள். அந்த அதிகாரியும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

பின்னர் காயல்பட்டணம் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து இன்று நடந்த விபத்து பற்றியும், ஏற்கனவே நடந்த விபத்துகள் பற்றியும் நகர் நல மன்றக் குழுவினர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். அவரும் காயிதேமில்லத் நகரிலிருந்து பிரதான சாலைக்கு இறங்குகின்ற இடத்தை நேரில் பார்வையிட்டு வேகத்தடை அமைக்க ஆவண செய்கிறேன் என்று உறுதியளித்துள்ளார்.
அதிகாரிகளுடனான .ச்சந்திப்பில் நகர் நல மன்றம் மற்றும் காக்கும் கரங்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
14 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top