ads



இக்ராஃ நேர்காணல்மூலம் பல்வேறுபட்ட மேற்படிப்புகளுக்காக 36 மாணவர்களுக்கு ரூ.3,72,000/- ஜகாத் நிதி உதவி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம்  இக்ராஃ கல்விச் சங்கத்தில் ஜகாத் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நேர்காணல் நடை பெற்றது. இது குறித்து இக்ராஃ செயலாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது அவர்கள்  வெளியிட்டுள்ள அறிக்கை :-
iq1_2.jpg
இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, I.T.I போன்ற படிப்புகளுக்கு வருடந்தோறும் 40 முதல் 50 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடம் அனுசரணை பெற்று வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு (2017-18) 29 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான கல்வி உதவித்தொகையாக ரூபாய் 4,41,000 வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த ஏழு ஆண்டுகளாக இக்ராஃவுக்கு ஜகாத் நிதி தனியாக சேகரிக்கப்பட்டு அதற்கு தகுதி வாய்ந்த மாணவ-மாணவியர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதுபோன்று இவ்வருடமும்  (2017-18) இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவியருக்கான நேர்காணல் கடந்த 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 09:45 மணி முதல் 01:30 மணி வரை, காயல்பட்டினம் கீழ நெயினா தெருவிலுள்ள இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.
iq2_1.jpg
இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி பேராசிரியர் கே.எம்.எஸ்.ஸதக் தம்பி, ஹாஜி ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஐ.மெஹர் அலிஇ ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர். இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான்,  நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர்  இந்நேர்காணல் நிகழ்வின்போது உடனிருந்தனர்.

அழைக்கப்பட்டிருந்த  39 மாணவ - மாணவியரில்  28 மாணவர்கள், 8 மாணவியர் உட்பட மொத்தம் 36 மாணவ-மாணவியர் இந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை - (இக்ராஃவின் நடப்பாண்டில் சேகரிக்கப்பட்ட ஜகாத் நிதித்தொகையான) ரூ.3,72,000/- நேர்காணல் முடிந்த நான்காவது தினத்தில் வழங்கி முடிக்கப்பட்டது.

இந்நேர்காணலில் பங்கேற்ற மாணவர்கள்  B.Pharm, B.Ed., M.Sc(Media Communication),  M.Sc (IT), M.Com, B.Sc (AHS) Critical Care Technology, B.Sc (HONS) Sports Medicine, B.Sc(Hotel Management), B.Sc(Comp. Sci.),  B.E. (Mechanical, ECE, Civil, Automobile), Dip. in Mechanical, Civil, Automobile, Fire & Safety (PDFSE)  உள்ளிட்ட படிப்புகளுக்காக உதவித்தொகை கோரியிருந்தனர். மாணவியர் B.Sc (Nursing), BPT (Physiotherapy), B.Ed., M.Sc.(Maths), M.Com, Diploma in Biochemical and Microbial Techniques (DBMT)  உள்ளிட்ட படிப்புகளுக்காக கல்வி உதவித்தொகை கோரியிருந்தனர்.

இக்ராஃ ஜகாத் நிதியைப் பொறுத்தவரை 2010-11 ஆம் வருடம்  ரூபாய் 48,000/- கிடைக்கப் பெற்று 5 மாணவ -மாணவியருக்கும், 2011-12 ஆம் வருடம்  ரூபாய் 91,800/- கிடைக்கப்பெற்று 10 மாணவ-மாணவியருக்கும், 2012-13 ஆம் வருடம்  ரூபாய் 4,36,400/- கிடைக்கப்பெற்று 39 ஏழை-எளிய மாணவர்களுக்கும், 2013-14 ஆம் வருடம்   ரூபாய் 2,40,600/- கிடைக்கப்பெற்று 25 மாணவ-மாணவியருக்கும், 2014-15 ஆம் வருடம்  ரூபாய் 2,27,000/- கிடைக்கப்பெற்று 22 மாணவ-மாணவியருக்கும், 2015-16 ஆம் வருடம்  ரூபாய் 2,36,000/- கிடைக்கப்பெற்று 28 மாணவ-மாணவியருக்கும், சென்ற வருடம் (2016-17) ரூபாய் 3,66,100/- கிடைக்கப்பெற்று 32 மாணவ-மாணவியருக்கும், இவ்வருடம் (2017-18) ரூபாய் 3,72,000/- கிடைக்கப்பெற்று 36 மாணவ-மாணவியருக்கும், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆக கடந்த 8 ஆண்டுகளில் கிடைக்கப் பெற்ற மொத்த ஜக்காத் நிதி ரூபாய் 20,17,900/- ஐ 197 ஏழை-எளிய மாணவ- மாணவியருக்கு  வழங்கப்பட்டுள்ளது.

இக்ராஃவின் முறையான கல்விப்பணிகளை நேரில் கண்டும், கேள்விப்பட்டும் ஏராளமான கல்வி ஆர்வலர்களும், நன்கொடையாளர்களும் தாங்களாகவே முன்வந்து கல்விக்காக ஜகாத் நிதி வழங்கி வருவது குறித்து இக்ராஃ நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியையும், நிதி வழங்கிய சகோதரர்களுக்கு மிகுந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

இன்ஷா அல்லாஹ்! இனி வரும் வருடங்களில் இதை விட அதிகமாக ஜகாத் நிதி கிடைக்கப் பெற்று, அதனை முறையாக ஏழை- எளிய மாணவர்களுக்கு வழங்கி அதன்மூலம் அவர்கள்தம் வாழ்வை பிரகாசம் பெறச் செய்வோமாக! அல்லாஹ் அதற்கு அருள் புரியட்டுமாக! ஆமீன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் இக்ராஃ செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது தெரிவித்துள்ளார்.

தகவல் :
A.தர்வேஷ் முஹம்மது,
நிர்வாகி - இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.
10 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top