ads



பாபரி மசூதி மீட்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் இராஜாஜி பூங்கா அருகில் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
SDPI.jpgபாபரி மசூதி இடிப்பு தேசிய அவமானம்...

SDPI.jpgபாபரி மசூதியை இடித்த இடத்திலேயே கட்டவேண்டும்.. 

SDPI.jpgபாபரி மசூதி இடிப்பதற்கு காரணமாக இருந்த பாசிச சங்கப்பரிவார பா.ஜ.க தலைவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும்..

பாபரி மசூதியை மீட்டெடுக்கும் வரை இந்தியாவில் உள்ள அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைத்து போராடுவோம் என்கிற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தியாவில் உள்ள 500 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் SDPI கட்சியின் சார்பாக பாபரி மசூதி மீட்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
sd_1.jpg
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் SDPI கட்சியின் சார்பாக மாவட்ட தலைநகரில் உள்ள இராஜாஜி பூங்கா அருகில் 06/12/2017 புதன்கிழமை  காலை 10.30 மணிக்கு  மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆ.ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி அவர்கள்தலைமை வகித்தார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாசுல் சமீர் அவர்களும், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் புதுக்குடி ராஜா அவர்களும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் முன்னிலை வகித்தனர்.

SDPI கட்சியின் மாநில பேச்சாளர் K.S.சாகுல் ஹமீது உஸ்மானி அவர்களும், விசிக மாவட்ட செயலாளர் தோழர் முரசு தமிழப்பன் அவர்களும், அருட்பணியாளர் J.V.சுந்தரிமைந்தன் அவர்களும் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் M.மைதீன் கனி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.முஹம்மது தாஹிர் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும்  இருந்து 40 க்கு மேற்பட்ட பெண்களும் 300 க்கு மேற்பட்ட ஆண்களும் திரளாக கலந்துகொண்டு பாபரி மசூதியை மீட்டெடுக்க போராடுவோம் என்கிற முழக்கமிட்டனர். மத்திய பாசிச அரசுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர்.

முக்கியமாக காயல்பட்டினம் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒருசில ஊர்களில் வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். தங்கள் கடைகளை இன்று ஒருநாள் அடைத்தது இந்த போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தகவல் :
H.சம்சுதீன்,
மாவட்ட பொதுச்செயலாளர்,
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.
7 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top