ads



நகர்நல மன்றத்தின் தொடர்முயற்சியின் காரணமாக ஆபாத்தான நிலையில் இருந்த இரண்டு மரங்களும் அகற்றப்பட்டது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் கீழ நெய்னார் தெரு மற்றும் கீழ சித்தன் தெரு ஆகிய தெருக்களில் ஆபத்துகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த இரண்டு மரங்களும் நேற்றும் இன்றும் அடுத்தடுத்து அகற்றப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
1_1.jpg
ஏற்கனவே 18/07/2017ல் நகராட்சி ஆணையரிடம்நகர்நல மன்றத்தின் மூலம் மனு கையளிக்கப்பட்டது. அம்மனுவின் மேல் நடவடிக்கைக்காக நகராட்சி ஆணையரால் மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், 20/09/2017 அன்று கோட்டாச்சியர், வட்டாச்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர்களை நேரிடையாக சந்தித்து, ஆபத்தை விளைவிக்கும் மரத்தை விரைந்து அகற்ற நகர் நல மன்றம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் திருமதி பொன்செல்வி 20/09/2017 அன்றே மரங்களை பார்வையிட்டு அகற்றுவதற்கு பரிந்துரை செய்தார்.
6_1.jpg
அதன் பின்னரும் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக்கொண்டிருந்த இப்பணி, நகர் நல மன்றத்தின் தொடர் வலியுறுத்தலால் 04,05/12/2017 ஆகிய தினங்களில் அடுத்தடுத்து அகற்றப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
7.jpg
இது சம்மந்தமாக நகர் நல மன்றத்தினர் முன்வைத்த கோரிக்கையை அதிகாரிகளால் ஏற்றுக்கொண்டு அகற்றப்பட்டதற்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தொடர்ந்து பலமுறை அதிகாரிகளை சந்தித்து அழுத்தம் கொடுத்து, இக்கோரிக்கை நிறைவேற முழு ஒத்துழைப்பு கொடுத்த நகர் நல மன்றத்தின்களுக்கு அந்த தெருக்களைச் சேர்ந்த  பொதுமக்கள் நன்றியும்இ பாராட்டும் தெரிவித்ததோடு, துஆக்களும் செய்தனர்.
5 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top