ads



கடும் மழையிலும் களப்பணியில் நகர் நல மன்றக் குழுவினர்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
கடந்த 1ஆம் தேதி நகரில் பெய்த கடும் மழையிலும், நகர் நல மன்றக் குழுவினர் களப்பணியில் ஈடுபட்டனர். அதுகுறித்த விபரம் பின்வருமாறு...
KNNM Logo.jpg
ஓகி புயலின் காரணத்தால் கடந்த வெள்ளிக்கிழமை (01/12/2017) அன்று நமதூரில் கனமழை மாலை வரை தொடர்ந்து பெய்துள்ளது. இதனால் பள்ளமான இடங்கள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

மழை நீரால் மிகவும் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நகர் நல மன்றம் சார்பில் சில பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட், இப்பகுதிகளுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு வெள்ள நிவாரணக்குழுவின் அனுசரனையுடன் நகர்நல மன்றம் மூலம் சுமார் 450 பயனாளிகளுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

கனமழையால் பாதிப்புக்குள்ளான இடங்களின்  புகைப்படத்துடன் சேர்த்து  முழுவிபரங்களையும் மேலாண்மை பேரிடர் குழுவுக்கும், நகராட்சி ஆணையருக்கும் மற்றும் சுகாதார ஆய்வாளரின் கவனத்துக்கு நகர்நல மன்றம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

மேலாண்மை குழுவின் சார்பில் வந்த அதிகாரிகளை, காட்டு தைக்கா தெரு, சுலைமான் நகர் சல்லித்திரடு ஆகிய இடங்களை பார்வையிட அழைத்து சென்றோம். பாதிப்பின் தன்மையை புரிந்து கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இத்துடன் பல்வேறு பகுதிகளில் இருந்து வழிந்தோடி வந்த மழைநீர் புகாரிஷ் ஷரீபின் பின்புறம் சென்றடைந்து ஆறுபோல் காட்சி அளித்தது. தேங்கிக்கிடக்கும் இம்மழைநீரை  கடலுக்கு வெட்டியிட்டால் தான் பல பகுதிகளில் இருந்து வந்து நேரிடையாக கடலுக்கு சென்றடையும்.

இத்தகவலை நகராட்சி ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவரும் புரிந்துகொண்டு துரிதமாக JCB யை அனுப்பியதால், தேங்கிய மழைநீர் தொடர்ந்து கடலுக்கு சென்றுக்கொண்டு இருக்கின்றது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு தகவல்களையும், ஆணையரின் கவனத்துக்கு நகர் நல மன்றம் கொண்டுசென்றது, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
5 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top