ads



ஆத்தூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குடியிருப்பு பகுதிகளை SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகம் தலைமையில் கண்காணிப்பு குழுவினர் பார்வையிட்டனர்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Untitled 2.jpg 
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ள  தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடியதால் ஆத்தூரில் உள்ள பழைய ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரு வழிப் பாதையாக இருந்த இந்த வழி தற்காலிகமாக  02/12/2017 அன்று அண்மையில் புதிதாக கட்டப்பட்ட புதிய பாலம் வழியாக  மாற்றம் செய்யப்பட்டு புதிய பாலத்தில் மட்டும் போக்குவரத்து விடப்பட்டது. பழைய பாலம் போலீசாரால் மறைப்புகள் வைக்கப்பட்டு வழி மறிக்கப்பட்டது.

இந்த மாற்றுவழி பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கடந்த வருடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட 14ம் வார்டுக்கு உட்பட்ட தைக்கா தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள வடிகால் வசதி, அன்மையில் SDPI கட்சியின் தொடர் கோரிக்கைகள் மூலமாக அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் குழாய்கள் பதித்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் ஓடுகிறதா என்பதை கண்காணிக்க 02/12/2017 சனிக்கிழமை அன்று SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் காயல் சம்சுதீன் அவர்கள் தலைமையில் ஆத்தூர் கிளை தலைவர் மஜீத் மற்றும் கிளை நிர்வாகிகள் இனைந்து அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும் தொடர்ந்து ஆற்றின் கரையோரமாக உள்ள பகுதிகளை ஆத்தூர் கிளையின் கண்காணிப்பு குழு தொடர்ந்து பார்வையிட்டு தேவையான அவசர கால பணிகளை செய்திட தயாராக உள்ளனர்..

தகவல் :
செய்தி மற்றும் ஊடகத்துறை.
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.
4 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top