ads



புன்னகை மன்றம் மற்றும் காயல்பட்டினம் அரிமா சங்கம் இணைந்து நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
புன்னகை மன்றம் மற்றும் காயல்பட்டினம் அரிமா சங்கம் இணைந்து நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரிமா தலைவர் ஜனாப் சதக்கத்துல்லா அவர்களின் தலைமையில் கடந்த 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) துளிர் பள்ளியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
12.jpg
இந்நிகழ்வில் குழந்தை நல மருத்துவர் கிஸார்,  காயல் S.E. அமானுல்லாஹ், ஜனாப் மசூது, ஜனாப் பாதுல் அஷ்ஹாப் ஆலீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
13.jpg
அதனைத்தொடர்ந்து, காயல்பட்டினம் அரிமா சங்கத்தின் முயற்சியில் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு குவைத்தில் பணிபுரியும் சகோதரர் அப்துர்ரஹ்மான் வழங்கிய ரூ.65,000 மதிப்பிலான சோலார் மின் விளக்குகள், புன்னகை மன்றத்தின் முயற்சியில் துளிர் சிறப்பு குழந்தை பள்ளிக்கு சகோதரர் துணி உமர் அன்சாரி மற்றும் ஓமன் காயல் நல மன்றம் வழங்கிய  ரூ.25,000 மதிப்பிலான  Speech theraphy பயிற்சி கருவி, புன்னகை மன்றத்தின் முயற்சியில் இயலா நிலை பெரியவருக்கு ஒரு சகோதரர் வழங்கிய ரூ.4500 மதிப்பிலான ஊன்றுகோல் (crutches), புன்னகை மன்றம் முயற்சியில் சுவாச பிரச்சனை உள்ள பெரியவருக்கு சகோதர் K.M.ரபீக் அவர்கள் வழங்கிய ரூ.2900 மதிப்பிலான (Nebulizer)நெபுலைசர் கருவி, காயல்பட்டினம் அரிமா சங்கத்தின் முயற்சியில்  தேனீர் தொழில் செய்யும் சகோதரிக்கு வாவு S.ஆப்தீன் அவர்கள் வழங்கிய ரூ.2000 மதிப்பிலான Tea Cane ஆகியவை வழங்கப்பட்டதோடு, குளிர் காலத்தை முன்னிட்டு தேவையுள்வர்களுக்கு பெட்ஷீட் வழங்கும் திட்டமும் துளிர் பள்ளி குழந்தைகளுக்கு Shoe வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
14.jpg
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜனாப். துளிர் ஷேக்னா, ஜனாப். நிஜார், ஜனாப். VDN அன்சாரி, ஜனாப். அப்துர்ரஹ்மான் மற்றும் ஜனாப். சேகு அப்துல் காதர் ஆகியோர் செய்திருந்தனர்.
29 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top