ads



நவ:30-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது! பொதுமக்கள் கலந்துகொள்ள அழைப்பு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது நவம்பர் மாதத்திய கூட்டம் 30.11.2017 முற்பகல் 11.00 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் சங்கு கூடத்தில் வைத்து நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ள உள்ளார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் நேரில் அளித்திடலாம்.

இந்நேர்வில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் (Subsidy) உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணவும் பொதுமக்கள் இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
28 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top