ads



பாபர் மசூதி இடிப்பு தேசிய அவமானம்! SDPI கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக டிசம்பர் 6 புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
thumbnail 2.jpg
தூத்துக்குடி மாவட்டம் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாசில் சமீர் அவர்களும், மாவட்ட செயலாளர் ஸ்ரீவை உஸ்மான் அவர்களும் கலந்துகொண்டனர்.
IMG1.jpg
இந்த மாவட்ட செயற்குழுவின் தீர்மானங்கள் :

1> வருகின்ற டிசம்பர் 6 புதன்கிழமை அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை தேசிய அவமானமாக கருதி அந்த தினத்தில் #தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

2> தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெருகிவரும் சுற்றுச்சூழல் சீர்கேடு, நிலத்தடி நீர் மற்றும் ஆற்று மணல் கடத்தல் போன்ற இயற்கை வளங்களை சுரண்டும் DCW / STERLITE போன்ற தனியார் ஆலைகளுக்கு எதிராக மக்கள் திரள் விழிப்புணர்வு நடைபயணம் மாவட்ட முழுவதும் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

3> வடக்கு ஆத்தூர் 14ம் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள கழிவுகளை முழுவதுமாக அகற்றி வடிகால் அமைக்க வேண்டும். பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்கப்பட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விரைவில் மக்கள் திரள் முற்றுகை போராட்டம் ஆத்தூர் பேரூராட்சியை நோக்கி நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த SDPI கட்சியின் செயல்வீரர்கள அயராது உழைத்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட தலைவர் தனது முடிவுரையில் கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர். இந்த செயற்குழுவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல் :

H.சம்சுதீன்,
மாவட்ட பொதுச்செயலாளர்,
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.
21 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top