ads



நாடாளுமன்ற உறுப்பினரை ஐக்கிய பேரவையினர் சந்தித்து காயல்பட்டின இரயில் நிலைய கோரிக்கைகள் கையளிப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ip2.jpg
காயல்பட்டினம் முஸ்லீம்  ஐக்கிய பேரவையின் சார்பில் 10/11/2017 வெள்ளிக்கிழமை மாலை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயசிங் தியாகராஜ்  நட்டர்ஜி அவர்களை சச்தித்து காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில், காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தில் நடைமேடையை உயர்த்தி தரும்படியும், மின் விளக்குகளின் வசதியை அதிகரித்து தரும்படியும், பணியாட்களின் எண்ணிக்கையை உயர்த்தித் தரும்படியும் அக்கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

இக்கோரிக்கையை அளிப்பதற்கு முன்னர் பேரவையின் சார்பில் இரயில் நிலையம் சென்று தேவைகளை அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நமது கோரிக்கையை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், அனைத்து கோரிக்கைகளும் செயல் வடிவம்பெற, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என ஐக்கிய பேரவை நிர்வாகிகளிடம் உறுதி அளித்துள்ளார்.

மேலும் மண்டல இரயில்வே மேலாளர் அவர்களோடு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் முன்னிலையில் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, கா.மு.ஐ பேரவை கோரிக்கைகளை அவரது கவனத்துக்கு முன் வைத்தார். மண்டல இரயில்வே மேலாளர் அவர்களும் ஆவன செய்வதாக வாக்களித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மேலாளர் அவர்களை நேரில் காயல்பட்டினம் வந்து ஆய்வு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, தானும் இரயில்வே நிலையத்துக்கு வந்து குறைகளை கண்டறிவதாகவும் M.P.அவர்கள் நம்மிடத்தில் வாக்களித்தார்.
ip1.jpg
நாடாளுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்கு முன்பு ஆளும் கட்சியின் மாவட்டச்செயலாளரும், மாண்புமிகு முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் அவர்களை சந்தித்து இந்த கோரிக்கைகள் நிறைவேற உரியவர்களுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டோம்.

இச்சந்திப்பின் போது பேரவையின் தலைவர் அல்ஹாஜ் S.O.அபுல்ஹசன் கலாமி அவர்கள், துணைத்தலைவர்கள் அல்ஹாஜ் தாஜீத்தீன் அவர்கள், அல்ஹாஜ்,அல்ஹாபிழ் SH பாதுல் அஸ்ஹாப் ஆலீம் அவர்கள், செயலாளர் அல்ஹாஜ்  வாவு M.M.சம்சுத்தீன் அவர்கள், பொருளாளர் அல்ஹாஜ் ஜெஸ்மீன் கலீல் அவர்கள், துணைச்செயலாளர் அல்ஹாஜ் கைலானி அவர்கள், ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ், அல்ஹாபிழ் SAR. இஸ்ஹாக் அவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் AR.இக்பால் அவர்கள், அல்ஹாஜ் AJ.சொளுக்கு முஹ்யத்தீன் அவர்கள் மற்றும் ஜனாப் MAK ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

காயல்பட்டினம் நகர அதிமுக நகர செயலாளர் ஜனாப் MJ.செய்யிது இப்ராஹிம் அவர்கள் மற்றும் நகர அம்மாப்பேரவை செயலாளர் அல்ஹாஜ் LS அன்வர் அவர்கள் ஆகியோர்   இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்ததோடு, இக்கோரிக்கைகள் நிறைவேற ஆவன செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடமும், மாவட்ட செயலாளரிடமும் அவர்கள் பரிந்துரை செய்தனர்.
13 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top