ads



ஜெய்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு நிகழ்வுகள்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ஜெய்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 15/10 அன்று நடைபெற்றது. அக்கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியாவது :-
JKWA1.jpg
எமது அமைப்பின் கூட்டம் 15.10.2017 அன்று மன்றத்தலைவர் அல்ஹாஜ் M.A.S. செய்யது அபுதாஹிர் அவர்கள் தலைமையில் பிஸ்மி ஜெம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. துணை தலைவர் அல்ஹாஜ் S.M.செய்யது அபுதாஹிர்,ஜனாப் J.S உதுமான் மற்றும் ஜனாப். உஜைர் மவ்லானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாஃபிழ் நுஸ்கி கிராஅத் ஓதினார்.
JKWA2.jpg
தலைமையுரைக்குப்பின் பரிசீலனை குழு உறுப்பினர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்கள் கூட்டம் கூட்டப்பட்டதின் நோக்கத்தை விளக்கி பேசினார்கள்.

இதுவரை எம் மன்றம் ஆற்றிய பணிகளையும், வரவு செலவு கணக்குகளயும் தலைவர் அவர்கள் வாசித்தார்கள். அதை கூட்டம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

தீர்மானங்கள் :

*   நமது அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் M.AS. செய்யது அபு தாஹிர் அவர்கள் நமதூர் ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் அறக்கட்டளையின் தலைவராகவும், நமது அமைப்பின் செயலாளர் ஹாஃபிழ் M.A.செய்யது முஹம்மது அவர்கள் ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் அறக்கட்டளையின் அறங்காவலராக பொறுப்பேற்றதற்கு பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துவதோடு ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் அறக்கட்டளைக்கு நன்றியையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

*  நமதூர் ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் டிரஸ்டிற்கு அவசர கால உதவிக்கு (EMERGENCY FUND) ரூபாய் ஐயாயிரம்(Rs.5000/-) வழங்குவது.

*  நமதூரைச்சார்ந்த சகோதரர் ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்கு பொருளாதார உதவி செய்வது.

*  நமது அமைப்பின் பொருளாளர் O.L.சேக் அப்துல் காதிற் அவர்களின் தாயார் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஹாஜி S.A. உவைஸ்னா லெப்பை அவர்கள் மனைவியின் வஃபாத்திற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் ஙாயிபு ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது.
JKWA3.jpg
மன்ற உறுப்பினர் பிலால் அவர்களின் நன்றியுரைக்குப்பின் துஆ ஸலவாத்துடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது அல்ஹம்துலிலாஹ்!

இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் புகைப்படங்கள் :
சகோ. செய்யது முஹம்மது.
12 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top