ads



வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர்களின் மறுமலர்ச்சி நாள் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
wwwc.JPG
நாட்டு நலப்பணி திட்டம் அணி எண் 187-ன் சார்பாக ஏவுகணையின் தந்தை, இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 16.10.17 அன்று மாலை 3 மணி அளவில் சமூக வலைதளங்கள் மாணவிகளுக்கு வரமா? சாபமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இச்சிறப்பு பட்டிமன்றத்தில் நாட்டு நலப்பணி திட்டம் மாணவிகள் மற்றும் பசுமை கழக மாணவிகளும் கலந்து கொண்டனர்.

பட்டிமன்ற நடுவராக வணிக செயலாட்சித் துறைத்தலைவர் S.A. ரஹ்மத் ஆமினா பேகம் MBA., M.Phil., MBA(HR) அவர்கள் பங்கேற்றார். பட்டிமன்றத்தின் சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளை உற்சாகபடுத்தினார். இறுதியாக சமூகவலைதளங்களில் இருக்கும் நன்மை, தீமைகள் குறித்து நடுவர் கூறினார். மாணவிகள் தங்கள் கல்விக்கு பயன்படும் விதத்தில் அவற்றை உபயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்கள்.

இச்சிறப்பு பட்டிமன்றத்தினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களும், பசுமை கழக அலுவலர்களும் ஒருங்கிணைத்தனர்.
7 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top