ads



நவம்பர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று 11-வது பொதுக்குழு ! அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
அபுதாபி காயல் நல மன்றத்தின் செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் பொதுக்குழுவை இம்மாதம் (நவம்பர்) 10ஆம் தேதி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் அம்மன்றம் வெளியிட்டுள்ளது...
AbuDhabiKAWALogo.jpg

இறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 52ஆவது செயற்குழு கூட்டம், 13.10.2017 வெள்ளிக்கிழமை மாலையில், மன்றத்தின் துணைத்தலைவர் எஸ்.ஏ.சி.ஹமீது அவர்கள் தலைமையில், பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் நடைபெற்றது ம‌ன்ற‌த்தின் செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் [பாதுல் அஷ்ஹாப்] கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.

மன்றத்தின் அடுத்த (11-ஆவது) பொதுக்குழு கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவ-10 திகதி வெள்ளிக்கிழமையன்று K.F.C.பார்க்- (பழைய ஏர்போர்ட் ரோடு [அல்-நூர் மருத்துவமனை அருகில்) வெகு சிறப்பாகக் கூட்ட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு பொதுக்குழு இதர காரியங்களை சிறப்பாக்கி தர உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இறுதியாக மவுலவி ஹாஃபிழ் நஹ்வி எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.

மன்றத்தின் 11-வது பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தகவல் :
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்)
7 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top