ads



மலபார் காயல் நல மன்ற பொதுக்குழு நிகழ்கள்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
கேரள மாநிலம் - மலபார் காயல் நல மன்றத்தால் (மக்வா) நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை :-

மலபார் காயல் நலமன்றத்தின் (மக்வா) 20வது பொதுக்குழு 22.10.2017 அன்று மாலை 6 மணிக்கு கோழிக்கோடு ஜெயில்ரோட்டில் உள்ள சாளை உஸ்மான் அவர்கள் வீட்டு மாடியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
1.jpg
கிராஅத் :

ஆரம்பமாக உறுப்பினர் ரயீஸ் அவர்களின் மகன் ஜமால் முஹம்மது அழகிய மழலை குரலில் கிராத் ஓதி துவக்கி தந்தார்.

வரவேற்பு / தொகுப்பு :

செய்தி தொடர்பாளர் சு.நா. மீரான் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றத்துடன், கடந்த பொதுக்குழுவின் மினிட்ஸ் வாசித்து கூட்டத்தின் அங்கீகாரம் பெற்றுக்கொண்டார், அதனை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தலைமை :

கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய நம் மன்ற தலைவர் S.N. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நம் மன்றம் நம் உறுப்பினர்களின் சிறப்பான ஒத்துழைப்பால்  சிறந்த முறையில் செயல் பட்டு வருவதாகவும் இன்னும் சிறப்பாக நாம் நம் மன்றத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.
15.jpg
செயலாளர் உரை :

அதனை தொடர்ந்து உரை நிகழ்த்திய மன்ற செயலார் N.M. மொய்தீன் அப்துல் காதிர் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம் மன்றம் செயல்பாடுகளை குறித்து விளக்கமாக பேசிய அவர், நம் மன்றத்தின் செயல் பாடு திறம்பட உள்ளதாகவும் பொருளாதார சூழ்நிலையில் பல இன்னல்களை சந்தித்து வரும் இந்த நேரத்திலும் நம் மன்ற உறுப்பினர்கள் சிறப்பான பங்களிப்பை செய்து வருவதாக பாராட்டி பேசினார்.
8.jpg
தொழுகை :

மக்ரிபு பாங்கு கொடுக்கப்பட்டு நம் உறுப்பினறும் ஷிபா வின் செயலாளர் S.M. மஸ்வூத் அவர்கள் தலைமையேற்று மக்ரிபு தொழுகை ஜமாஅத் நடத்தினார்கள்.

இடைவேளை :

இடைவேளை சமயத்தில் பிஸ்கட் மற்றும் சுவையான மிளகு பால் அனைவர்க்கும் பரிமாறப்பட்டது. தொழுகைக்கு பிறகு ஆதில் சுலைமான் அருமை மகனார் முஹம்மது ஹபீஸ் தம் மழலை குரலால் இறைமறை ஓதி அனைவரையும் நெகிழ செய்தார்.

கணக்கு தாக்கல் :

கடந்த பொதுக்குழு முதல் இந்த பொதுக்குழு  வரை உள்ள கணக்குகள் பொருளாளர் S. ஷேக் சலாஹுதீன் தாக்கல் செய்தார் கணக்கு தணிக்கையாளர் சீனா மொஹதூம் அவர்கள் ஒப்புதல் அளித்தார் அறிக்கை ஏகஒப்புதல் பெறப்பட்டது.

மேலும் உறுப்பினர்கள் சந்தா விஷயத்தில் நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் அவர்கள் எப்போது அழைத்தாலும் தான் வந்து சந்தா தொகை பெற்று கொள்வதாகவும் தனது உரையில் கூறினார்.
16.jpg
ஷிஃபாவின் புதிய தலைமை :

ஷிஃபா புதிய தலைமை குறித்து மன்ற முன்னால் செயலாளரும் தற்போதைய ஷிஃபா அரங்காவளருமான சாளை உஸ்மான் அவர்கள்...

ஷிஃபா  அமைப்பானது தற்போது புதிய தலைமையேற்று சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பணிகள் தொய்வின்றி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் நம் மன்ற முன்னால் தலைவர் S.M. மஸ்ஊத் அவர்கள் ஷிஃபா வின் செயலராக தேர்தெடுத்திருப்பது குறித்து நம்பமன்றத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

ஷிஃபா செயலாளர் உரை :

ஷிபாவின் செயலாளர் S.M. மஸ்வூத் அவர்கள் இப்பொது செயற்பட கூடிய புதிய நிர்வாகிகள் குறித்தும்  தற்போதைய செயல்பாடு நிலை குறித்தும் தெளிவுபடுத்தி விளக்கமளித்தார். மேலும் மக்கள் மருந்தகம் நமது ஊரில் சிறப்பான சேவை செய்து வருவதாகவும் ஊரில் பொதுநல அமைப்புகளால் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் நம் மக்கள் மருந்தகம் இலவசமாக மருந்து வழங்கி சேவை செய்ததையும்  எடுத்துரைத்தார்.

உறுப்பினர்கள் கருத்து பறிமாற்றம் :

உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் சந்தேகங்களையும் ஆரோக்யமான முறையில் பகிர்ந்து கொண்டனர்.

நன்றியுடன் முடிவடைந்தது :

மன்ற துணை தலைவர் M.A.உதுமான் அப்துல் ராஜிக் நன்றி கூற நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
6.jpg
இரவு உணவு :

ஆபிதீன் பாய், சாஹிப் தம்பி குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்த இடியாப்பம் கறி ஜவ்வரிசி அனைவர்க்கும் இரவு உணவாக பரிமாறப்பட்டது.

தகவல் :
சு.நா.மீரான்.
7 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top