adsஅக். 15 அன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை அறிமுகப் பயிற்சி பட்டறை”

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
அக். 15 அன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை அறிமுகப் பயிற்சி பட்டறை” (Arabic Calligraphy Introductory Training Workshop)!! எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு!!
thumbnail_Image 2.jpg
எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி வளாகத்தில், 15.10.2017 ஞாயிறன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு ”அரபு வனப்பெழுத்து வரைகலை அறிமுகப் பயிற்சி பட்டறை” (Arabic Calligraphy Introductory Training Workshop) நடைபெற உள்ளது. இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலறிக்கை:

சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.
thumbnail_Image 1.jpg
நிகழ்வு # 20

இவ்வமைப்பின் புதிய முயற்சியாக, கத்தர் காயல் நல மன்றம் (KWAQ) & பெங்களூரு காயல் நல மன்றம் (KWAB) அமைப்புகளுடன் கைகோர்த்து, “அரபு வனப்பெழுத்து வரைகலை”-யை (Arabic Calligraphy) நமதூரின் அரபு மத்ரஸாக்களில் பயிலும் மாணவ-மாணவியருக்கு அறிமுகம் செய்யும் பொருட்டு, வருகின்ற அக்டோபர் 15, 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று (இறைவன் நாடினால்), சிறப்பு அறிமுகப் பயிற்சி பட்டறை (Introductory Training Workshop) ஒன்றை நடத்திட ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்நிகழ்வு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு நடத்தும் 20-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி நோக்கம்

பண்டைய மனிதர்கள் கொண்டாடிய அரபு வனப்பெழுத்து வரைகலை, இன்று நம் சமூகத்தால் பெருமளவு புறக்கணிக்கப்படுவது வேதனையான உண்மை. ஹாஃபிழ்களையும் ஆலிம்களையும் மிகுதியாக உருவாக்கும் நாம், இக்கலை வளர்ந்திட ஊக்குவிப்பது காலத்தின் கட்டாயம்.

உண்மையில் ஒருவர் இக்கலையை கற்பதற்கு, தன்-விருப்பத்தை தவிர வேறு காரணங்கள் எதுவும் தேவையில்லை. எனினும், இன்ன பிற நோக்கங்களையும் அவர் தேடுபவராக இருந்தால், இதோ கீழே கூறப்பட்டுள்ள அனைத்தையுமே இக்கலை அளிக்கிறது:

• குர்ஆன்-மொழியில் உள்ள அழகிய எழுத்துகளை மேலும் அழகுபடுத்தப்படுகிறது

• வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தை குறைத்து மனதை அமைதிபடுத்த உதவுகிறது

• பண்பாட்டு வேர்களோடு நம்மை இணைக்கிறது

• பல நேரங்களில், இக்கலையே ஒரு சிகிச்சையாக அமைகிறது

• தியான நிலையை அடையச் செய்கிறது

• நம் குணத்தினை செழுமையாக்கிட பயிற்சி அளிக்கிறது

• அரிதான கலையை மீட்டெடுக்கிறோம் எனும் திருப்தியை அளிக்கிறது

• படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது

• அறிவுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஒருசேர தீனிப் போடுகிறது.

• எல்லா வயதினருக்கும் ஏற்ற மகிழ்ச்சியான பொழுதுபோக்கு

• ஒரு தனிப்பட்ட வர்த்தக அடையாளத்தை தோற்றுவிக்க வழிவகை செய்கிறது

நம் சமூகம் இனியும் இழந்துவிடக்கூடாதவைகளுள் இக்கலையும் ஒன்று! நாம் மறந்துவிட்ட இதனை - நமதூரின் மத்ரஸா மாணவ-மாணவியருக்கு கொண்டு செல்லும் உயரிய நோக்கோடு, இச்சிறப்பு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் பயின்ற சிறப்பு பயிற்சியாளர்!

இந்நிகழ்வில், பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் பயிற்சியாளராக கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். இவர் அரபு வனப்பெழுத்து வரைகலையை துருக்கியில் முறையாக பயின்று-பட்டயம் (إجازة) பெற்ற முதல் & ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது “இந்திய-இஸ்லாமிய கலை & பண்பாட்டு நிறுவனத்தின் (Institute of Indo-Islamic Art and Culture)” மூலம், பலதரப்பட்ட மாணவ-மாணவியருக்கு அரபு வனப்பெழுத்து வரைகலையை கற்பித்து வருகிறார்.

நிகழ்ச்சி அழைப்பிதழ் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி பட்டறைக்கான அழைப்பிதழ் கீழே:
thumbnail_Image 3.jpg
மத்ரஸாகளில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி! காயல்பட்டினத்தின் ஆண்கள் அரபு மத்ரஸாக்களில் இருந்து 8 மாணவர்கள் வீதமும், பெண்கள் மத்ரஸாக்களில் இருந்து 15 மாணவிகள் வீதமும் - முன்பதிவு செய்யப்பட்டு,

சுமார் 100 (பன்னிரண்டு வயதுக்கு மேலுள்ள) மாணவ-மாணவியர் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவ-மாணவியர்களை முன்பதிவு செய்யும் பணிகள், நிகழ்ச்சியில் பங்கேற்கும் மத்ரஸாக்களில் துவங்கியுள்ளன. கூடுதல் தகவலுக்கு, மாணவ-மாணவியர்கள் தங்களின் மத்ரஸாக்களையோ / நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையோ (9902001223 / 9865819541 / 9486655338) அனுகலாம்.

செய்தியாக்கம்: அ.ர.ஹபீப் இப்றாஹீம்
11 Oct 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top