ads



தூ-டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம்! 27 பெண்கள் உட்பட 116 பேர் குருதிக் கொடையளித்தனர்!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட குருதிக்கொடை முகாமில், 27 பெண்கள் உட்பட 116 பேர் குருதிக்கொடையளித்துள்ளனர். முகாமுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்துள்ள இரத்த வங்கிகள் சார்பில் குருதிக் கொடை முகாம், 03.10.2017. செவ்வாய்க்கிழமையன்று 10.00 மணி முதல் 16.00 மணி வரை நடத்தப்பட்டது.

முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு, மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) தலைவர் எஸ்.ஏ.முஹ்யித்தீன் தலைமை தாங்கினார். நோனா அபூஹுரைரா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளான எம்.என்.அஹ்மத் ஸாஹிப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, எம்.எம்.முஜாஹித் அலீ அறிமுகவுரையாற்றினார். ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் சிவலிங்கம் வாழ்த்துரையாற்றினார்.

100 முறைக்கும் மேலாக குருதிக்கொடையளித்துள்ள காயலர் கானி முஹம்மத் முஹ்யித்தீன், 50 முறைக்கும் மேலாக குருதிக்கொடையளித்துள்ள காயலர் எஸ்.எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டனர்.

துவக்க நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, 10.30 மணிக்கு முகாம் துவங்கி, 16.00 மணிக்கு நிறைவுற்றது. காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 27 பெண்கள், காயல்பட்டினம் & சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 89 ஆண்கள் என – பல்வேறு இரத்த வகைகளைக் கொண்ட அனைத்து சமுதாய மக்கள் மொத்தம் 116 பேர் இம்முகாமில் குருதிக்கொடையளித்தனர்.

காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், கே.எம்.டீ. மருத்துமவனை நிர்வாகி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முன்னாள் தலைவர் எஸ்.ஐ.தஸ்தகீர், முஹ்யித்தீன் பள்ளி முத்தவல்லி, புதுப்பள்ளி ஜமாஅத் பிரமுகர் எஸ்.ஐ.முஹம்மத் ஷாஃபிஈ, கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ், துபை காயல் நல மன்ற முன்னாள் துணைத்தலைவர் ‘துணி’ உமர், தம்மாம் காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களான நோனா அபூஹுரைரா, ‘துணி’ அன்ஸாரீ, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஹமீத் ஹில்மீ, மருத்துவர்களான டாக்டர் இத்ரீஸ், டாக்டர் ஜாஃபர் ஸாதிக், டாக்டர் ஃபாஸீ, டாக்டர் நர்கிஸ் பானு, தமுமுக – மமக நிர்வாகிகளான ஐதுரூஸ், முஹ்ஸின் முர்ஷித், ஜாஹிர் ஹுஸைன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கி முதன்மை அலுவலர்கள், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கியின் முதன்மை அலுவலர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் – குருதிக்கொடையளித்த அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினர்.

“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்ட குருதிக் கொடை முகாமில் 10 பெண்கள் உட்பட 88 பேர் குருதிக் கொடையளித்திருந்தனர். இம்முறை – முந்தைய எண்ணிக்கையை விட 32 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் குருதிக் கொடையளித்துள்ளனர்.

நடப்பு குருதிக் கொடை முகாமில், 24 சதவிகித பெண்கள் குருதிக் கொடையளித்துள்ளனர். முந்தைய முகாமில் குருதிக் கொடையளித்த பெண்களைக் காட்டிலும் இது 170 சதவிகிதம் அதிகமாகும். இந்திய அளவில் 6 சதவிகித அளவிலேயே பெண்கள் குருதிக் கொடையளிப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. தேசிய சராசரியை விட அதிகளவில் இம்முகாமில் பெண்கள் குருதிக் கொடையளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

21Don01Kani.jpg100 முறைக்கும் மேலாக குருதிக் கொடையளித்த கானி முஹம்மத் முஹ்யித்தீன் மீண்டும் கொடையளிக்கிறார்.

10SpchInspector.jpgமுகாம் துவக்க விழாவில் ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் சிவலிங்கம் வாழ்த்துரையாற்றுகிறார்.

5 Oct 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top