ads

  • Welcome to Kayal Today


நெடுஞ்சாலைத்துறை அதிகாரியுடன் நகர்நல மன்றம் குழுவினர்கள் சந்திப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KNNM Logo.jpg
காயல்பட்டினம் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பிரதான சாலையில் (Main Road) சில மாதங்களுக்கு முன்பு  குடிநீர் குழாய்க்காக  சாலையை தோன்றி  குழாய்களை பதித்தனர். குழாய் பதித்த அந்த இடங்களான, அல்ஜாமிவுல் அஸ்ஹர், ஹாஜி அப்பா பள்ளி, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சாலைகளை சரியாக செப்பணிடாததால் குண்டும் குழியுமாக  காணப்படுகின்றது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது.

இது குறித்து நகர் நல மன்றம் குழுவினர்கள் திருச்செந்தூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை  (ADE) Assistant Divisional Engineer திரு. சேகர் அவர்களை 21/09/2017 வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு சந்தித்து, நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பிரதான சாலையில் உள்ள குறைகளை  விரிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. அவைகளை கேட்டறிந்த ADE அவர்கள் நகர் நல மன்றத்தினர் கொடுத் புகைப்படத்தையும் பார்வையிட்டார்கள்.

மேலும் பிரதான சாலையின்  (Main Road) இரண்டு கரைகளிலும் மணல்கள் குவிந்து இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்த நிகழ்வையும் ADE அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவைகளை கேட்டறிந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அவர்கள், இன்னும் 2 வார காலத்துக்குள் சாலைகளை சீரமைத்து தருவதுடன் குவிந்துள்ள மணல்களையும் அகற்றி     பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு வழிவகை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
22 Sep 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top