adsகாயல்பட்டினம் நகராட்சி ஆணையருடன் நகர்நல மன்றத்தினர் சந்திப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
222222.jpg
11/09/2017 திங்கள்கிழமை மாலை சுமார் 4:30 மணியளவில் நகர்நல மன்றம் சார்பாக பல்வேறு புதிய மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வழியுறுத்த நம் நகர் மன்ற ஆணையர் திரு. பொன்னம்பலம் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. பொன்வேல் ராஜ்  அவர்களையும் சந்தித்துள்ளார்கள்.
 
காயல்பட்டினம் முஸ்லிம் ஜக்கிய பேரவை, நகர்நல மன்றம் மற்றும் காக்கும் கரங்கள் ஆகிய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பல்வேறு கோரிக்கைகளுக்கு, இச்சந்திப்பின்போது ஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

ஆணையர் அவர்களின் விளக்கம் வருமாறு...
 
Knnm1.JPG இடுகாட்டில் குப்பை கொட்டுவதை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். தற்போது முறைப்படுத்தப்பட்டுள்ளது.

Knnm1.JPG கடையக்குடி-- BIO GAS PLANT இன்ஷாஅல்லாஹ் DECEMBER இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்ற நல்ல தகவலோடு அதற்கான ஆயத்தப்பணிகள் விரைவில் துவங்க உள்ளதாகவும் கூறினார்.

Knnm1.JPG தடைப்பட்டு இருந்த  சாலைகளில் மதுரை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சாலைகளுக்கு இந்த மாத இறுதியில் டெண்டர் விடப்படவுள்ளதாகவும், மீதமுள்ள சாலைகளும் அடுத்தடுத்து போட உள்ளதாகவும் கூறினார்.

Knnm1.JPG போக்குவரத்துக்கு இடையூராக ஆபத்தான நிலையில்  உள்ள கீழ சித்தன் தெரு வேப்ப மரத்தை அகற்ற 2 மாதங்களுக்கு முன்பு ஐக்கிய பேரவை மற்றும் நகர் நல மன்றம்  வைத்த கோரிக்கையை ஒப்புதலுக்காக வருவாய் கோட்டாச்சியர் அவர்களுக்கு  அனுப்பிய மனுவின் நகலை பெற்றுக்கொண்டோம். சம்மந்தப்பட்ட அதிகாரி மரத்தை நேரிடையாக பார்த்து சென்றதாகவும் விரைவில் அகற்ற ஒப்புதல் கிடைக்க உள்ளதையையும் கூறினார்.

மேலும்  இது விசயமாக திருச்செந்தூரில் உள்ள "வருவாய் கோட்டாச்சியர்" அவர்களை சந்திக்க கடந்த இரண்டு நாட்களாக சென்று வருகின்றோம். அலுவலகங்களில் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தம் நடைபெறுகின்றதால் சந்திக்க இயலவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.


Knnm1.JPG நகரெங்கும் பரவியுள்ள வெறி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதை இன்றும் ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் இருவரின் கவனத்துக்கு மீண்டும்  கொண்டு சென்றோம். இன்னும் ஒரு வாரத்துக்குள் முறையான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.
14 Sep 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top