ads



வாவு வஜீஹா கல்லூரியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28.08.2017 மற்றும் 29.08.2017 ஆகிய இருநாட்களில் ICT Academy சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. எமது கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. தலைமை தாங்கினார். கணிணி துறையின் பேராசிரியர் திருமதி S.N. சித்தி ஷாமிலா, MCA., MBA., சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வரவேற்புரை வழங்கினார். எமது கல்லூரியின் இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. இரண்டு நாட்களும் பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு ஆசிரியர்களை ஊக்குவித்தனர்.

இப்பயிற்சி முகாமில் ICT Academyயின் ஆளுமை மேம்பாட்டு பயிற்சியாளர்   திரு. ஜினோ ஜோஸ் அவர்கள் கலந்து கொண்டு Emotional Intelligence என்ற தலைப்பில் பயிற்சி இரு நாட்களும் அளித்தார். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்கும் வகையில் சிற்சில பயிற்சிகள் நடைபெற்றன. கற்பித்தல் நடைமுறைகளை விளக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமில் எமது கல்லூரியைச் சார்ந்த இளம் ஆசிரியைகள் 18 பேரும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி பகுதியின் கல்லூரிகளிருந்து 10 ஆசிரியப் பெருமக்களும் கலந்துக்கொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2 Sep 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top