ads



வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் Internet of Things (IoT) என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு 17.08.2017 அன்று கல்லூரியின் கணிணி துறையும், தகவல் தொழில்நுட்ப துறையும் இணைந்து நடத்தின. கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையில், மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப துறை மாணவி S.A. பவ்ஷான் அப்ரின் கிராத் ஓத, கருத்தரங்கு இனிதே ஆரம்பமானது.
www1.jpg
கணிணி துறையின் தலைவி திருமதி N. நேசா ஆக்னஸ் பெலின்டா MCA., M.Phil., அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. தொடக்கவுரை நிகழ்த்தினார். கருத்தரங்கு சிறப்பாக நடைபெற, கல்லூரிச் செயலர் ஹாஜி  W.M.M. மொகுதஸீம் B.A., (CS), மற்றும் கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

ICT Academy-யின் மூத்த பயிற்சியாளர் திரு. M.P. ஜெகதீசன் (M.E) அவர்கள் Internet of Things IoT-யின் அவசியத்தையும், உலகத்திலுள்ள அனைத்து பொருள்களும் கணிணியோடு இணைக்கப்பட உள்ள கணிணி துறையின் அபரிதமான வளர்ச்சியை பற்றியும் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் Intel Edison Kit மூலம் சென்சார் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதையும், அதை கணிணி ப்ரோகிரோம் மூலம் எவ்வாறு கட்டுபடுத்தப்படுகிறது என்பதையும் செயல்முறை விளக்கமளித்து காட்டினார்.
www2.jpg
இக்கருத்தரங்கில் 11 கல்லூரிகளைச் சார்ந்த 95 மாணவியரும், 8 ஆசிரியப் பெருமக்களும், 2 ஆய்வு மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இக்கருத்தரங்கில் கல்லூரியின் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

எம் கல்லூரியில் நிறுவன உறுப்பினர் Dr. வாவு M. வஜீஹா ருமைஜா MBBS., அவர்கள் முடிவுரை நிகழ்த்தினார். கல்லூரியின் நிர்வாக உறுப்பினருமான ஹாஜ்ஜா வாவு S.A.R. ஆசியா ஃபிர்த்தோஸ் அவர்கள் கருத்தரங்கின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். தகவல் தொழில் நுட்பத்துறை தலைவி திருமதி  J. ஷர்மின் மேரி ஜானகி M.Sc., M.Phil., அவர்கள் நன்றியுரை வழங்கினார். மூன்றாம் ஆண்டு கணிணித்துறை மாணவி V.K.M. கதீஜா நஸ்ரின் துஆ ஓத, கருத்தரங்கு நாட்டுப்பண்ணுடன் நிறைவுற்றது.
30 Aug 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top