adsஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 105-வது செயற்குழு நிகழ்வுகள்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
சஊதி அரபிய்யா ஜித்தாவில் இயங்கும் நம் நகர் மக்களின் நல அமைப்பான காயல் நற்பணி மன்றத்தின் அறிக்கை பின்வருமாறு :-
J3.jpg
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 105 வது செயற்குழு கூட்டம் ஜித்தா ஷரஃபியாவிலுள்ள இம்பாலா உணவக கூட்டரங்கில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி சிறப்பாக நடந்தேறியது.

வரவேற்புரை :

கூட்டத்திற்கு சகோ.பிரபு நூர்தீன் நெய்னா முன்னிலை வகிக்க, சகோ.குளம் அஹ்மது முஹ்யித்தீன் தலைமை ஏற்றார். சகோ.சட்னி முஹம்மது லெப்பை இறைமறை ஓதினார். சகோ.செய்யிது முஹம்மது சாஹிப் அனைவரையும் வரவேற்றார்.

தலைமை உரை :

நம் மன்றத்தின் 105 வது செயற்குழு முறையே தொடர்ந்து நடைபெறும் நிலையில் சீசன்கால பணிகளுக்கு மத்தியிலும் தொலைவிலிருந்து வந்து கலந்து கொள்வது மகிழ்விக்கிறது என்றும், உறுப்பினர்களின் இவ்வாறான உத்வேகம் நம் பணிகளை இன்னும் செழுமையாக்கும் என்றும், மேலும் மன்றப்பணிகளின் அவசியம் குறித்த செய்திகளையும் தலைமை உரையாக தந்தார் மன்றத்தலைவர் சகோ.குளம் அஹ்மது முஹ்யித்தீன்.

மன்ற செயல்பாடுகள் :

மன்றத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற சகோதரர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அன்போடு வழங்க வேண்டும்

என்றும், மேலும், சென்ற செயற்குழுவிற்கு பிறகு நடந்தேறிய மன்றத்தின் செயல்பாடுகளையும் விரிவாக தந்தார் செயலர் சட்னி செய்யிது மீரான்.

நிதி நிலை :

மன்றம் இதுவரை பெற்ற வரவு, செலவு மற்றும் இருப்பு விபரங்களை நிதிநிலையாக சமர்பித்தார் சகோ.ஷெய்கு அப்துல் காதிர். மேலும், இவர் விடுப்பில் தாயகத்தில் இருந்த சமயம் ஷிஃபா மற்றும் இக்ரஃ சிறப்புக்கூட்டங்களில் கலந்து பரிமாறிய செய்திகளையும் விபரமாக சொன்னார்.

கலந்துரையாடல் :

மன்ற செயல்பாடுகள், பணிகள் மற்றும் நகரில் இயங்கும் ஷிஃபா மற்றும் இக்ரஃ குறித்து உறுப்பினர்கள் ஆரோக்கியமான அருமையான கருத்துப்பகிர்வுகள் சிறப்பான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.

உதவிகள் :

உரிமையோடு உதவி கேட்டு வந்த சொந்தங்களின் கல்வி மற்றும் மருத்துவ மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு கல்வி வகைக்காக ஐந்து நபருக்கும், மருத்துவ வகைக்காக மூன்று நபருக்கும் முறையே மன்றத்தின் உதவிகள் அறிவிக்கப்பட்டன.

மன்றத்தின் 106 வது செயற்குழு இன்ஷாஅல்லாஹ் அதே இம்பாலா உணவக கூட்டரங்கில் நடைபெறுமென்றும் அதன் விபரங்கள் பின்னர் அறியதரப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
J2.jpg
சகோ.கிஸார் ஸலாஹுத்தீன் அனுசரணையில் இரவு உணவு பரிமாறப்பட்டு, சகோ.சீனா மொகுதூம் நன்றி கூற, சகோ.முஹம்மது நூஹு பிராத்திக்க துஆ கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

தகவல் மற்றும் படங்கள் :
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா - சஊதி அரபிய்யா.
29 Aug 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top