ads



இக்ராஃ பொதுக்குழுக் கூட்டம்! ஜூலை 12 ஆம் தேதி கூடுகிறது

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடப்பு (ஜூலை) மாதம் 12ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் N.S.E.மஹ்மூது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 12.07.2017 புதன் கிழமை காலை 10:00 மணிக்கு, காயல்பட்டினம் கீழ நெய்னா தெருவில் - இக்ரஃ கல்விச் சங்கம் எதிரிலுள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இக்ராஃவின் ஆண்டறிக்கை தாக்கல்,
2016-17 பருவத்திற்கான வரவு-செலவு கணக்கு தாக்கல்,
2017-18 பருவத்திற்கான பட்ஜெட் தாக்கல்,
புதிய உறுப்பினர்களை அங்கீகரித்தல்,
நடப்பாண்டுக்கான (2017-18) கல்வி உதவித்தொகை குறித்த விபரங்கள் தாக்கல்,
இறுதி செய்யப்பட்டுள்ள இக்ராஃவுக்கான கட்டிட வரைபடம் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள  / இனி மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்த தகவல்கள் மற்றும் கலந்தாலோசனை,   மற்றும் எதிர்கால திட்டங்கள்  உள்ளிட்ட முக்கிய பொருள்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்கக் கோரி, இக்ராஃவின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் இ மெயில் மூலமும், கடிதங்கள் அஞ்சல் மூலமும், நேரடியாகவும் முறைப்படி தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் வெளிநாடுகள் / வெளியூர்களிலிருந்து நோன்புப் பெருநாள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளை சார்ந்து விடுமுறையில் தாயகம் வந்துள்ள இக்ராஃ உறுப்பினர்கள், மற்றும் காயல் நல மன்ற நிர்வாகிகள் இச்செய்தியையே அழைப்பாக ஏற்று, அவசியம் கூட்டத்தில் பங்கேற்று நல்ல பல ஆலோசனைகளை வழங்கிடுமாறும், அவ்வாறு யாரும் தாயகம் வந்திருப்பதை அறிந்தவர்கள், அவர்களுக்கு இத்தகவலைத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் N.S.E.மஹ்மூது தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
A.தர்வேஷ் முஹம்மது
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.
10 Jul 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top