ads

  • Welcome to Kayal Today


ஜூன்: 11-ல் இஃப்தார் மற்றும் கல்வி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி! மக்வா அழைப்பு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இயங்கி வரும் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) சார்பில், 11.06.2017. அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாகவும், இதன்போது கல்விச் சாதனையாளர்களுக்கு பரிசளிக்கப்படவுள்ளதாகவும், உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் பங்கேற்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அம்மன்றத்தின் அழைப்பறிக்கை :- 

அனைத்து உறுப்பினர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். 

நமது மன்றத்தின் இந்த வருட நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் 11ம் தேதி கோழிக்கோடு கல்லாய் ரோட்டில் உள்ள ஸ்நேஹாஞ்சலி ஆடிடோரியத்தில் வைத்து நடத்துவது என 28-05-2017 அன்று நடைபெற்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. 

மேலும் முன் காலங்களைப் போல் இந்த வருடமும் _SSLC/ +2 தேர்வுகளில் அதிக மதிபெண் பெற்ற நம் மன்றத்தின் உறுப்பினர்களின் சகோதர/சகோதரிகள் மற்றும் பிள்ளைகளை ஊக்குவிக்கும்_ விதமாக அவர்களுக்கு பரிசளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது, 

உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அனைத்து நிகழ்ச்சி களிலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்வா சார்பாக... 
தகவல்: 
S. N. மீரான்
(செய்தித் தொடர்பாளர்)
1 Jun 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top