ads



கடற்கரை குருசடி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த - மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் கடிதம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் கடற்கரை பூங்காவிற்கு வடகிழக்கே - அரசு புறம்போக்கு நிலத்தில், கீரிக்குளம் எனப்படும் இடத்திற்கும், பெண்கள் அமரும் பகுதிக்கும் மிக அருகில் - குருசடி என்ற கிருஸ்துவ வழிபாட்டுத்தலம் - சட்டத்திற்கு புறம்பாக உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த கட்டுமானம் - மத்திய அரசின் CRZ NOTIFICATION 2011 விதிமுறைகள் தடைசெய்துள்ள LOW TIDE LINE (LTL) மற்றும்  HIGH TIDE LINE (HTL) என்ற  இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

இது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் - துறை அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கட்டுமானங்கள் - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்களுக்கும், தமிழக அரசின் அரசாணைகளுக்கும் - எதிர்ப்பானவை.

உச்ச நீதிமன்றத்தில் SLP(C) 8519/2006 என்ற எண் கொண்ட வழக்கு தற்போது  விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் - தமிழகம் உட்பட  நாட்டின் அனைத்து மாநிலங்களும் பிரதிவாதிகளாக இணைக்கப்பட்டுள்ளன. 

இந்த முக்கிய வழக்கின், உச்சநீதிமன்ற  உத்தரவுகளை தொடர்ந்து, நாட்டின் அனைத்து மாநிலங்களும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பொது இடங்களில்  வழிப்பாட்டுத்தலங்கள் கட்டப்படுவதை தடுத்து  அரசாணைகள் வெளியிட்டுள்ளன. தமிழக அரசு இது சம்பந்தமான அரசாணையை (GO(Ms) No.437 dated 13.9.2010) - வருவாய்த்துறை மூலமாக - கடந்த 2010 ம் ஆண்டே வெளியிட்டுள்ளது. 

இது சம்பந்தப்பட்ட வழக்கை - கடந்த 11 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வரும் சூழலிலும், தமிழக அரசு இது குறித்த தெளிவான அரசாணையை 7 ஆண்டுகளுக்கு முன்பே  வெளியிட்டுள்ள சூழலிலும், சட்டத்திற்கு புறம்பான, இந்த ஆட்சேபனைக்குரிய கட்டுமானத்தை அப்புறப்படுத்த - அதிகாரிகள் தயக்கம் காட்டுவது மிகவும்  வருத்தத்திற்குரியது என்றும், சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள இந்த குருசடியை, அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்து - உச்சநீதிமன்ற உத்தரவையும், தமிழக அரசின் அரசாணையையும் அமல்படுத்த கேட்டுக்கொண்டும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - இன்று, மாவட்ட ஆட்சியர், திருச்செந்தூர் கோட்டாட்சியர், திருச்செந்தூர் வட்டாச்சியர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
21 Mar 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top