adsமக்வா பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் மருந்தகத்திற்கு ரூ.30 ஆயிரம் வழங்க முடிவு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மலபார் காயல் நலமன்றத்தின் (மக்வா)  19வது பொதுக்குழு 05.02.2017 அன்று மாலை 6 மணிக்கு கோழிக்கோடு கோட்டப்பரம்பில் உள்ள நெய்னாக்கா வீட்டு மாடியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...

அதன் நிகழ்முறைகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து அம்மன்றத்தின்  செய்தி தொடர்பாளர் S.N. மீரான் வெளியிட்டுள்ள அறிக்கையாவது...

கிராஅத் :

ஆரம்பமாக செயற்குழு உறுப்பினர் சேட் மஹமூது அவர்களின் மகள் *உம்மு ஸல்மா ரைஹானா* அழகிய மழலை குரலில் கிராத் ஓதி துவக்கி தந்தார்.

வரவேற்பு / தொகுப்பு :

துணை செயலாளர் ASI. முஹம்மது ஸிராஜ் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றத்துடன், கடந்த பொதுக்குழுவின் மினிட்ஸ் வாசித்து கூட்டத்தின் அங்கீகாரம் பெற்றுக்கொண்டார், 

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தலைமை :

கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய நம் மன்ற தலைவர் S.N. ரஹ்மத்துல்லாஹ் நமது ஊரில் நாம் நடத்திய கேன்சர் விழிப்புணர்வு முகாம் பற்றியும் அதில் பங்கெடுத்த ஊர் மக்களை பற்றியும் சிலாகித்து  பேசியதோடு, பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் சேவைநோக்குடன் நிகழ்ச்சியில் பங்கெடுத்து நம் அனைவர்க்கும் மிக தெளிவான விளக்கங்களை தந்த Dr. பிரதிப் சல்லியில் அவர்களையும் வெகுவாக பாராட்டினார்.

நம் சந்தேகங்களுக்கு பதில் தருவதற்காகவே துவங்கப்பட்ட வாட்சப் குழுமம் குறித்தும் அக்குழுமத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் இணைவது பற்றியும் குறிப்பிட்டார், அவர் நம்முடைய அடுத்த பொதுக்குழு தலசேரியில் நடத்துவது பற்றி உறுப்பினர்களிடம் கருத்து கேட்டார்.
 
கணக்கு தாக்கல் :

கடந்த பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் இடையில் நடந்த அனைத்து வரவு செலவு கணக்குகளை நம் மன்றத்தின் கணக்கு தணிக்கையாளரால் சரிபார்க்கப்பட்ட கணக்குகளை மிக தெளிவாக தாக்கல் செய்த பொருளாளர் S. சேக் சலாஹுதீன் அவர்கள் கூட்டத்தின் ஒப்புதலையும் பெற்றுக்கொண்டார், தான் இந்த பொறுப்பில் வந்து ஒரு வருடம் நிறைவடைந்ததாகவும் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தருவது தனக்கு மன நிறைவை தருவதாகவும் குறிப்பிட்டார்

செயலாளர் உரை :

அதனை தொடர்ந்து உரை நிகழ்த்திய மன்ற செயலார் N.M. மொய்தீன் அப்துல் காதிர் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம் மன்றம் செயல்பாடுகளை குறித்து விளக்கமாக பேசிய அவர்...

நம் ஊரில் நடத்திய கேன்சர் நிதழ்ச்சி மிகப்பெரிய வெற்றியாகவும் ஊர் மக்கள் அனைவர்க்கும் மிக உபயோகமாக அமைந்தது குறித்தும்,  நம் மன்றம் நடத்தும் Dr, பிரதீப் சல்லியில் விளக்கம் தரும் வாட்சப் குழுமம் பற்றியும் அதில் நம் ஊரை சார்ந்த 150 அதிகமானவர்கள் ப்ரயோஜனப்படுவது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

மேலும் காயல் பட்டினம் ஐக்கிய பேரவையில் இருந்து நம் மன்ற தலைவர், மற்றும் செயலாளரை அவர்களின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு கவுரவ ஆலோசகர்களாக இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கிடைத்த கடிதத்தை பற்றி குறிப்பிட்ட அவர் போதுமான விளக்கம் இல்லாத கடித்தமாக இருப்பதனால் உங்கள் சட்டதிட்டங்கள் என்ன என்பதை எங்களுக்கு விளக்குமாறு அவர்களுக்கு நாம் அனுப்பிய பதில்பற்றி விளக்கினார்.

நமது ஊரில் ஷிஃபாவால் துவங்கஉள்ள மக்கள் மருந்தகத்திருக்கு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் இருந்து வாட்சப் குழுமம் மூலமாக பெறப்பட்ட 30 ஆயிரத்தை நம்முடைய பங்களிப்பாக கொடுத்தது பற்றியும் தெரிவித்தார்.

மேலும் கேன்சர் விழிப்புணர்வு மற்றும் மக்கள் மருந்தகம் நிகழ்ச்சிக்காகவும், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் நாம் வாட்சப் குழுமம் மூலமாக பெற்ற தொகைகளின் கணக்குகளை முழு விபரத்துடன் MKWA NEWS வாட்சப் குழுமத்தில் பதிவிட்ட விபரங்களை எடுத்துடைத்தார்.

மக்ரிபு நேரம் நெருங்கிவிட்டதால் அந்த சிறு இடைவெளியில் நம் மன்றத்தின் ஆதரவாளர் முஹம்மது ஹுசைன் அவர்களின் மகன் மாஸ்டர் ஆதம் முஹம்மதின் அழகிய, கருத்தாளம் மிக்க இஸ்லாமிய அங்கிலப்பாடலை தன் மழலை குரலில் பாடி அனைவர் மனதையும் கவர்ந்தார்.
 
தொழுகை :

மக்ரிபு பாங்கு கொடுக்கப்பட்டு நம் உறுப்பினர் சீன ஐதுரூஸ் அவர்கள் தலைமையேற்று மக்ரிபு தொழுகை ஜமாஅத் நடத்திவருத்தார்.

சாஹிபு தம்பி, லக்கி உமர், ஆப்தீன் பாய் ஆகியோர்களால் மிக சிறப்பாக தயார் செய்யப்பட்ட சுவைமிக்க ஹரிரா பாலும், உள்ளிவடையும் பரிமாறப்பட்டது. 

ஷிஃபாவின் நிகழ்வுகள் :

நம் மன்றம் 2 வருடங்களுக்கு முன்பு ஆலோசனை செய்து நிலுவையில் வைத்திருந்த மக்கள் மருந்தகம் தற்போது ஷிஃபாவால் மிக சிறப்பான முறையில் துவங்குவதற்கான ஆயத்த பணிகள் நிறைவடைந்ததை விளக்கமாக எடுத்துரைத்த ஷிஃபாவின்  செயற்குழு உறுப்பினரும் நம் மன்றத்தின் செயற்குழு உறுப்பினருமான சாலை முகம்மது உதுமான் அவர்கள் நாம் செய்யக்கூடிய அனைத்து செயல்களும் அல்லாஹ்விடத்தில் கூலி கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யவேண்டும் என்றும், நாம் இப்போது கூடி இருப்பது ஒரு இபாதத்தாக நினைத்து முழு கவனத்துடனும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

கடந்த பொழு குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நாம் எந்த அளவுக்கு செயல்படுத்தி உள்ளோம் என்பதையும் விளக்கமாக தெரிவித்தார்.

உறுப்பினர்கள் கருத்து பறிமாற்றம் :

உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் சந்தேகம்களையும் கேட்டு விளக்கம் பெறுவதற்காக ஒத்துக்குப்பட்ட நேரத்தில் அரசு மருத்துவமனையில் சேவைகள் அதிகரிப்பதற்காகவும், மக்கள் மருந்தகத்துடன் ஒரு மறுத்துவக்குழுவையும் இணைப்பது பற்றியும் ஷிஃபாவிடம் வலியுறத்தவேண்டும் என்றும், நம் மன்றத்தின் கணக்கு தணிக்கையாளர் சீனா  மொகுதூம் முஹம்மது கேட்டுக்கொண்டார்.

உறுப்பினர் KRS ரபிக் அவர்கள் தான் ஜென்ரிக் மருந்து சாப்பிட்டு வருவதாகவும், அதன் ப்ரயோஜனாகளையும் அனுபவிப்பவர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் ஜெனீரிக் மருந்து பற்றி தெளிவாக விளக்கினார்.

கண்ணூர் MG. செய்து இபுறாஹிம் நம்முடைய கூட்டம் குறித்த நேரத்தில் துவங்கி குறித்த நேரத்தில் முடித்துக்கொண்டால் தன்னை போன்று வெளிவூரில் இருந்து வருபவர்களுக்கு இலகுவாக இருக்கும் என்ற கருத்தை அலுத்தமாக பதிவிட்டார்.

மேலும் மரைக்கார், ஆப்தின், காதர் ஆகிய உறுப்பினர்களும் தங்களின் கருத்துகளை தெரியபடுத்தினர். 

நன்றியுடன் முடிவடைந்தது.

மன்ற துணை தலைவர் M.A.உதுமான் அப்துல் ராஜிக் நன்றி கூற நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தகவல் :
S. N. மீரான்
செய்தி தொடர்பாளர்(mkwa)
உதவி(செயற்குழு)
21 Feb 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top