adsகத்தர் கா.ந.மன்றத்தின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
கத்தர் காயல் நல மன்றத்தின் 28ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி 09.12.2016 வெள்ளிக்கிழமையன்று காலை 11.00 மணி முதல் 6.30 மணி வரை, கத்தர் Messaid (Umm Sayyid)  Park இல் வைத்து நனி சிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...!!!  

புறப்பாடு :

மன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் தத்தம் வாகனங்களில் நிகழ்விடத்திற்கு வந்தனர். வாகன வசதி இல்லாதோருக்கு வாகனங்கள் வைத்திருப்போர்கள் பொறுப்பேற்று சிரமமின்றி அழைத்து வந்தனர். நிகழ்வின் துவக்கமாக, உறுப்பினர் பதிவு மற்றும் சந்தா சேகரிப்பு ஆகிய பணிகளை, மன்றப் பொருளாளர் அஸ்லம் மற்றும் துணைப் பொருளாளர் ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் ஆகியோர் நெறிபடுத்தினர்.

பொதுக்குழுக் கூட்டம் :-

ஜும்மா தொழுகையை நிறைவேற்றிவிட்டு அனைவரும் குறித்த இடத்தில் சங்கமித்தனர். மன்ற செயலாளர் M .N . முஹம்மது சுலைமான் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். மன்ற உறுப்பினர் ஹாபிழ் மஹ்மூத் லெப்பை அவர்கள் இறைமறையின் சில வாசகங்களை ஓதி இனிதே துவக்கி வைத்தார்.

மன்றத்தின் துணை தலைவர்  செய்யது முஹியத்தீன் மற்றும் ஹாபிழ் முஹம்மது லெப்பை ஆலிம் பாகவி ஆகியோர் முன்னிலை வகிக்க, மன்ற தலைவர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

சிறப்பு விருந்தினர் :-

அமீரக காயல் நல மன்ற முன்னாள் செயலாளர், நம் நகரின் முதல் கட்டட வடிவமைப்பாளர் ஜனாப் ஹபீப் ரஹ்மான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்கள்.     

கூட்ட நிகழ்வுகள் :

வழமைபோல், "கவிக்குயில்" ஃபாயிஸ் அவர்களின் இனிய இன்னிசை பாடலுடன் கூட்டம் ஆரம்பமானது.

தலைமையுரை :-

இந்த இனிய பொழுதில் இங்கு குழுமியிருக்கிற சிறப்பு விருந்தினர்கள் உட்பட - நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் துவக்கமாக வரவேற்றுப் பேசிய தலைவர் யூனுஸ் அவர்கள், துவக்கமாக, கத்தர் காயல் நலமன்றம் இவ்வாண்டு 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது நாள் வரை மன்றத்திற்காக ஒத்துழைப்பு நல்கிய உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்து கொள்வதோடு இந்த வருடத்தில் மன்றம் செய்த சேவைகளை பட்டியலிட்டு அனைவரையும் கவரும் வண்ணம் திறம்பட எடுத்துரைத்தார்.

செயல்திட்டங்கள் :

நடப்பு கல்வியாண்டில், நம் நகரில் நலிவுற்ற ஏழை - எளிய மாணவ-மாணவியர் 100 பேருக்கு, கத்தர் காயல் நல மன்றம், ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் (KWAUK), சிங்கப்பூர் காயல் நல மன்றம் (KWAS), பஹ்ரைன் காயல் நல மன்றம் (BAKWA) ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் பள்ளிச் சீருடைகளை இலவசமாக  இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் வழங்கி பயனாளிகளின் பிராத்தனைகளை பெற்றுள்ளோம் என்றால் அது மிகையாகாது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் கல்வி ஆண்டிலும் மேலும் பல மன்றகளை ஒன்றிணைத்து செயலாற்ற உள்ளோம்.

கத்தர் காயல் நல மன்றம் (KWAQ), காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் (KUFHK) & காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் ஆகியன இணைந்து, “உணவே மருந்து” எனும் நிகழ்ச்சியை கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பு  அழைப்பாளர் சிவகாசி’ மாறன் G அவர்களின் கலந்துரையாடலுடன் உடற்பயிற்சி நிகழ்ச்சியும் நனிசிறப்புடன் நடைபெற்றன.

இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து நம் மாணவ சமுதாயத்திற்காக பற்பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றோம் . அவ்வகையில் - ஒரு புது முயற்சியாக, பள்ளி மாணவர்களுக்கான “இயற்கையோடு இணைவோம்!” எனும் தலைப்பில் சுற்றுப்புற சூழல் மாசு மற்றும்  அதனால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்தான விழிப்புணர்வை நகரின் பள்ளி மாணவர்களுக்கு அறியச்செய்வது காலத்தின் கட்டாயம் என்பதனை கருத்திற்கொண்டு சிறப்பு முகாம் கடந்த அக்டோபர் மாதம்  திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சியிலுள்ள தாஜ் இயற்கைப் பழத்தோட்டத்தில் நடத்தினோம்.  

கத்தர் மற்றும் ஹாங்காங் காயல் நல மன்றங்கள் இணைந்து ஆண்டுதோறும் நடத்திவரும் கேன்சர் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜனவரி (2017) மாதம் 28 & 29 அன்று நமது KMT மருத்துவமனையில் வைத்து நடத்திட திட்டமிட்டுள்ளோம். அது சமயம் ஊரில் உள்ள மன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று செயல்படுமாறு கேட்டுக்கொள்ள படுகின்றனர்.

இரங்கல் :

மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி J ஜெயலலிதா அவர்களுக்கு மன்றத்தின் சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் உரை :-

பணிநிமித்தமாக இந்நாட்டிற்கு வந்திருக்கும் இத்தருணத்தில் இங்கு நம் மக்களின் ஒன்றுகூடல் இருப்பதை அறிந்து, இதில் கலந்துகொண்டு நம் உறவுகளை காணும் நோக்கில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு பேசியதன் வாயிலாக இங்கே வந்தேன். ஆனால் நீங்களோ சிறப்பு விருந்தினராக்கி என்னை கௌரவித்தமைக்கு நன்றி என்றும் கூறினார். கத்தர் நல மன்றத்தின் செயல்பாடுகளை அவ்வப்போது அறிந்திருந்தாலும், இங்கு நேரிடையாக காணும் போது வியப்பாகவே உள்ளது.   

குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளில் மாறுபட்டு செயலாற்றுவது தான் இந்நல மன்றத்தின் தனிசிறப்பு. அதிலும் குறைந்த உறுப்பினர்களை கொண்டு நிறைவான பணி செய்து வருகிறீர்கள்.

உங்களது பணியை மனதார பாராட்டும் இந்நேரத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு இன்னும் வெகு தூரத்தில் உள்ளது. ஆம், நம்மிடையயே மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர்த்து இதர படிப்புகள் குறித்தான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்பது வேதனையான விஷயம். குறிப்பாக மருத்துவத்துறையில் தற்சமயம் அமலில் உள்ள NEET தேர்வு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பது முற்றிலும் உண்மை. அதனை இக்ரா கல்வி சங்கம் பொறுபேற்று  பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விளக்க வேண்டும்.    

ஒரு சமூகம் மேம்பட வேண்டுமெனில் அது எல்லா துறையிலும் கல்வியறிவு பெற்றதாக அமைய வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களது சேவைகளை பொருந்தி கொள்வானாக..! உங்களது பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார் .

பின்னர், மன்றத்தின் கௌரவ தலைவர் கரீம் ஹாஜியார் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள் .

அதனை தொடர்ந்து, ஹாபிழ் முஹம்மது லெப்பை ஆலிம் பாகவி அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்த பொது சேவை மாண்புகள் குறித்து சிறிது சன்மார்க்க உரையாற்றினார்கள்   

பொருளாளர் உரை :

மன்றப் பொருளாளர் அஸ்லம், மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையைத் தாக்கல் செய்து, கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றார்.

மேலும், நடப்பாண்டில் மன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் அதே தருணத்தில், உறுப்பினர்களின் சந்தா நன்கொடை நிதிகள் சென்ற வருடத்தைவிட குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது . ஆகையால், மன்ற உறுப்பினர்கள் தமது நிலுவைச் சந்தா தொகையை விரைந்து செலுத்திடுமாறும், இயன்றளவு நிலுவையின்றி பார்த்துக்கொள்ளுமாறும், தற்காலத் தேவைகளை அனுசரித்து - நகர்நலப் பணிகளை நிறைவாகச் செய்திடுவதற்காக - தமது சந்தா தொகைகளை கனிசமாக உயர்த்தி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நன்றியுரை :-

மன்றத்தின் கௌரவ தலைவர் கரீம் ஹாஜியார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். கூட்ட நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடு :

மேலும், அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் நடந்திய ஒருங்கிணைப்பாளர்கள்  முஹம்மத் முஹ்யித்தீன் , பொக்கு ஹல்லாஜ், ஹாபிழ் முஹம்மது லெப்பை, முஹமது இப்ராஹிம் மற்றும்  உள்ளிட்ட அங்கத்தினர் அனைவருக்கும் மன்ற நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிறைவாக, ஹாஃபிழ் நைனா முஹம்மது அவர்களது துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.

பின்னர் அனைவருக்கும் மதிய உணவாக மன்ற உறுப்பினர் உமர் அனஸ் அவர்களின் கைவண்ணத்தில் தயாரான களரி சாப்பாடு பரிமாறபட்டது. சற்று இளைப்பாறிய பின்னர் இளஞ்சிறார்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியாக மன்றத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் "லெமன் ஸ்பூன்" போட்டி நடத்தியது இன்னும் நிகழ்வை களைகட்டியது.    

மகளிர் நிகழ்ச்சிகள் :

மகளீர்களுக்கு பொத்தான் தையல் போட்டி நடந்தது. அதில் மன்ற உறுப்பினர் இர்ஷாத் அவர்களின் மனைவி முதலிடம் பெற்றார்.

அஸர் தொழுகை :-

அஸர் தொழுகையை அனைவரும் நிகழ்விடத்திலேயே தொழுதனர்  பின்னர் அனைவருக்கும் தேநீர் பரிமாறப்பட்டது. .

ஆண்களுக்கான வினாடி-வினா போட்டி:

அஸர் தொழுகைக்கு பிறகு, ஆண்களுக்கான வினாடி-வினா போட்டி நடைபெற்றது. குர்ஆன், இஸ்லாம், அறிவியல், அரசியல்,  நம் நகரின் பாரம்பரியம்  ஆகிய அம்சங்களை உள்ளடக்கி கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. துவக்கமாக ஓரணிக்கு 6 பேர் வீதம், அனைவரும் 7 அணியினராகப் பங்கேற்றனர்.

இறுதிப்போட்டியில், ஹாபிழ் HMS சதக்கதுல்லாஹ் அவர்களது அணி முதற்பரிசையும், ஹாபிழ் மஹ்மூத் லெப்பை அவர்களின்  அணி இரண்டாவது பரிசையும் பெற்றது. இந்நிகழ்வை வினாடி வினா பிரபலம் கத்தீப் மாமுனா லெப்பை, துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் மற்றும் மதிப்பீட்டாளர்  முஹமது இப்ராஹிம் ஆகியோர் இப்போட்டியை அனைவரும் ரசிக்கும் வகையில் உற்சாகமாக வழிநடத்தினர்.      

பரிசளிப்பு :

குழந்தைகளுக்கும், போட்டிகளில் வென்றோருக்கும் பரிசளிப்பு விழா, 18.00 மணியளவில் நடைபெற்றது. தலைவர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் பரிசளிப்பு விழாவை நெறிப்படுத்தினார்.

இனிய நினைவலைகளுடன் மன்ற உறுப்பினர்கள் பிரியாவிடைபெற்றுச் சென்றனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!

செய்தி வெளியீடு :
M.N.முஹம்மத் சுலைமான்
(செயலாளர்)

தகவல் :
எஸ்.கே.ஸாலிஹ் (பிரதிநிதி)
கத்தர் காயல் நல மன்றம்.
7 Feb 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top