ads



வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் மின்னொளி கைபந்து போட்டி : Sulthan Warriors அணி சாம்பியன் பட்டம் வென்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கைப்பந்து போட்டிகள் 2016 டிசம்பர் 30, 31 மற்றும் 2017 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில் Kayal Manchester, Fi-Sky Boys, Sulthan Warriors மற்றும் RK Safwaa அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.

2017 ஜனவரி 1ஆம் தேதி மாலை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் Sulthan Warriors அணியும்,  RK Safwaa அணியும் விளையாடியது. இப்போட்டியில் Sulthan Warriors அணி 15 - 5 என்ற புள்ளி கணக்கில் முதல் சுற்றையும், இரண்டாவது சுற்றை RK Safwaa அணி 15 - 11 என்ற புள்ளி கணக்கிலும் வெற்றிபெற்றன.

எனவே இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்ற முடிவு செய்யும் மூன்றாவது சுற்றில் பரபரப்பு ஏற்பட்டது, இறுதியில் Sulthan Warriors அணி 15 - 10 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், Fi-Sky Boys அணியும், Kayal Manchester அணியும் விளையாடின. இப்போட்டியில் Fi-Sky Boys அணி 15 - 9,  15 - 12 என்ற புள்ளி கணக்கில் நேர் செட்டில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில், Sulthan Warriors அணி 25 - 23,  25 - 13 என்ற புள்ளி கணக்கில் நேர் செட்டில் வெற்றிபெற்று வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் மின்னொளி கைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு வீ-யூனைடெட் குழுமத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஜனாப் U.முஹம்மது நூகு  தலைமைதாங்கினார், L.T.S.Gold House நிறுவனர் ஜனாப் சித்தீக் முன்னிலை வகித்தார், ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் செயலாளர் ஜனாப். ஹாஜி இல்லியாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள்.

துவக்கமாக இறைமறை வசனத்தை சகோ. அலாவுத்தீன் ஓதினார், வீ-யூனைடெட் குழுமத்தின் உறுப்பினர் சகோ. M.A. மாஹீன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்கள்.

பரிசளிப்பு விழாவின் துவக்கமாக அரையிறுதிக்கு தகுதிபெற்ற Kayal Manchester மற்றும் RK Safwaa அணியின் வீரர்களுக்கான தனிநபர் பரிசுகளை L.T.S. சித்தீக் அவர்கள் வழங்கினார்கள்.
FiSkyBoys.jpg
வெற்றிக்கு முனைந்த அணியின் வீரர்களுக்கான நபர் பரிசு மற்றும் சுழற்கோப்பையை U.முஹம்மது நூகு அவர்கள் வழங்கினார்கள்.
SW.jpg
வெற்றிபெற்ற அணியின் வீரர்களுக்கான தனிநபர் பரிசு மற்றும் சுழற்கோப்பையை ஹாஜி இல்லியாஸ் அவர்கள் வழங்கினார்கள்.

இறுதியாக நன்றியுரைக்குப்பின் தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்நிகழ்ச்சிகளை சகோ. காழி அலாவுத்தீன் தொகுத்து வழங்கினார்.
2 Jan 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top