ads



பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற தொலைதூர ஓட்டப்போட்டியில் வாவு வஜீஹா கல்லூரி மாணவிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
MSU.jpg
திருநெல்வேலி மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான தொலைதூர ஓட்டப்போட்டி  21 கிலோமீட்டர் (inter-Collegiate 21 Km Half Marathon) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 16ஆம் தேதி காலை 7 மணியளவில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் மாணவிகள் பங்கேற்றனர்.
wwwc.JPG
இப்போட்டியில் காயல்பட்டினம், வாவு வஜீஹா வனிதயர் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி D. செல்வமணி போட்டி தூரமான 21 கிலோ மீட்டரை 1 மணி நேரம் 52 நிமிடங்களில் கடந்து முதலாமிடத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கனிதவியல் துறைச் சேர்ந்த மாணவி P. முத்துரமா போட்டி தூரத்தை 1 மணி நேரம் 53 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

வெற்றிபெற்ற இரண்டு மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனரையும், கல்லூரியின் தலைவர், செயலர், துணைச் செயலர், முதல்வர், இயக்குனர் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.
19 Dec 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top