ads



கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் MLA இரங்கல் செய்தி

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் உடல் பொது மக்களின் பார்வைக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.  அங்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநிலபொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாணவர் பேரவை செயலாளர் பழவை அன்சாரி உள்ளிட்ட  நிர்வாகிகள் நேரில் சென்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.இ. அ.திமு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
kamnh.jpg
முன்பு காலை செய்தியாளர்களிடம்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசிய போது குறிப்பிட்டதாவது,
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
 அவர் துணிச்சல் மிக்கவர், எதையும்மன தைரியத்தோடு எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவர். தனக்கு எது சரி என்று தெரிகிறதோ, அதை தைரியத்தோடு செய்யக்கூடியவர். தவறு என்றால் துணிந்து புறந்தள்ளக்கூடியவர்.
முஸ்லிம் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவர் காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிபின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது நூற்றாண்டு விழாவை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 1995-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அரசின் சார்பில்  விழா எடுத்து பெருமை சேர்த்ததை இந்த நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நன்றியுடன் நினைவு கூர்ந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. கூறினார்.

தகவல் : ஏ.ஆர்.சேக்முகம்மது, 
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
6 Dec 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top