ads



வங்கிகளில் நாளை முதியவர்கள் மட்டுமே பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் !

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
banknotes.jpg
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நாளை முதியவர்கள் மட்டுமே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பவைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ரூ2.5 லட்சத்திற்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள் தங்களது பான் கார்டு எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.

இதனிடைய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை 4500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைத்தது. இந்த நிலையில் முதியவர்கள் மட்டுமே நாளை வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் செயல்படும் நேரத்தில் மட்டுமே பணம் மாற்றித் தரப்படும் எனவும், மற்ற வங்கி பரிவர்த்தனைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் இந்திய வங்கிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நன்றி.
தட்ஸ்தமிழ்.
19 Nov 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top