ads



அமீரக காயல் நல மன்றத்தின் துணை தலைவருக்கு சவூதி தலை நகர் ரியாதில் உற்ச்சாக வரவேற்ப்பு !

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
பணி நிமித்தம் சவூதி அரேபியா சென்றிருந்த அமீரக காயல் நல மன்ற துணை தலைவர் சாளை ஷேக் சலீம அவர்கள் தலைநகர் ரியாத்திற்கு சென்றிருந்த போது அங்கு வசிக்கும் காயலர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.
Ri2.jpg
ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்று ரௌதா பூங்காவில் இரவு ஓன்று கூடலும், ஆகஸ்ட்  26 ஆம் தேதி ஜும்மா தொழுகைக்குப்பின் ரியாத் காயல் நற்ப்பணி மன்றத்தின் தலைவர் முஹம்மத் நூஹுஅவர்கள் தலைமையில் அவர்களின் இல்லத்தில் வைத்து கிட்டத்தட்ட 20 காயலர்கள் ஓன்று கூடி காயல் கலரி உண்டு மகிழ்ந்தனர்.
Ri1.jpg
உணவிற்குப்பின் நகர் நலம் பற்றிய பொது விவாதங்கள் நடைபெற்றது. இந்த ஓன்று கூடலில் ரியாத் நகர மார்க்க அழைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நமதூரை சார்ந்த அல்தாபி ஆலிம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் அன்று அஸர் தொழுகைக்குப்பின் பத்ஹா என்ற இடத்தில் காயலர்கள் ஓன்று கூடி முகமன்கள் கூறி சந்தித்து மகிழ்ந்தனர்.
Ri3.jpg
தனக்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவத்தை மிகவும் பெருமையாக கருதுவதாகவும், இந்த சந்திப்பை மிக குறுகிய சந்தர்ப்பத்தில் தனது இல்லத்தில் ஏற்ப்பாடு செய்து சிறப்பித்த ரியாத் காயல் நல மன்றத்தின் தலைவர் முஹம்மத் நூஹு அவர்களும் மற்றும் பொறுப்பாளர்களும் ஏனையவர்களும் தன் மீது வைத்திருக்கும் மதிப்பிற்கும் அன்பிற்கும் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொண்டார்.

தகவல் மற்றும் புகைப்படம் :
சகோ. S.A.K. சுலைமான்.
2 Sep 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top