ads



இந்தியாவின் 70-ஆவது சுதந்திர நாள் ஆகஸ்ட் 15 கடந்த திங்களன்று ஜித்தாவில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
இந்நாளையொட்டி, சஊதி அரபிய்யாவின் துறைமுக தொழில் நகரான ஜித்தாவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர நாள் விழா காலை 08-00 மணியளவில் கொண்டாடப்பட்டது.
Jed2.jpg
சஊதி அரபிய்யா நாட்டிற்கான இந்திய துணைத்தூதர் மாண்புமிகு முஹம்மது நூர் ரஹ்மான் செய்க். இந்திய தேசிய கொடியேற்றி, சுதந்திர நாள் உரையாற்றியதோடு, இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர நாள் வாழ்த்துச் செய்தியையும் வாசித்தார்.

இனிய இந்நிகழ்வில் தமிழகத்தை சார்ந்த பெரும்பாலானவர்களும் , பல மாநிலங்களை சார்ந்த இந்தியர்களும் மற்றும் சவூதி நாட்டின் தொழில் அதிபர்கள் யாவரும் பங்கேற்றதோடு நிறைவில் இந்திய துணைத் தூதரைச் சந்தித்து தமது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
Jed1.jpg
இந்திய சர்வதேச பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள்  தேசிய கீதம் மற்றும் தேசப்பக்தி பாடல்களை பாடவும் அனைவரது கைத்தட்டல்கள்  மூலம் பாராட்டுக்கள் பெற்றனர்.
     
விழா நிறைவில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் இனிப்பு - கார சிற்றுண்டியும், குளிர்பானம், தேனீர் உள்ளிட்டவையும் பரிமாறப்பட்டன.

தகவல் :
ஜித்தாவிலிருந்து...
சட்னி ,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
18 Aug 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top