அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷிஃபா டிரஸ்ட் ஏற்பாட்டில் உலக காயல் நல மன்றங்கள் இணைந்து முதற்கட்டமாக நடத்திய தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பதிவு முகாமில் 350 குடும்பத்தினர் பயன் பெற்றனர்.


அதன் தொடர்ச்சியாக 27.7.2016 புதன் கிழமையன்று அப்பா பள்ளி தெரு ரெட் ஸ்டார் சங்கத்தில் வைத்து காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைப்பெற்ற இரண்டாவது கட்ட முகாமிற்கு ஷிஃபா டிரஸ்டின் தலைவர் டாக்டர்.முஹம்மது இத்ரீஸ் அவர்கள் தலைமை ஏற்க, ஷிஃபாவின் செயலர். அல்ஹாஃபிழ். ஹபீப் ரஹ்மான் ஆலீம், ஷிஃபாவின் பொருளாளர் அஹ்மது சுலைமான் மற்றும் ஷிஃபாவின் நிர்வாகி கண்டி. சிராஜுத்தீன் நிஜார் ஆகியோர் முன்னிலையில் இம்மருத்துவ பதிவு முகாம் துவங்கப்பட்டது.
உலக காயல் நல மன்றங்களைச் சார்ந்த சில நிர்வாகிகளும், பல முக்கிய உறுப்பினர்களும், இதர சமூக ஆர்வலர்களும் இம்முகாம் வெற்றியுடன் நடைபெற முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமில் நமதூர் கிராம நிர்வாக அதிகாரி திரு.பிரான்சிஸ் பாரதி அவர்களும், தாசில்தார் உயர்திரு. செந்தூர் ராஜன் மற்றும் துணை தாசில்தார் உயர்திரு. ரகு ஆகியோர்களின் உத்தரவு பெற்று மேலும் இரண்டு கிராம நிர்வாக அதிகாரிகளான திரு.வேல் ஜோதி, திரு. மூக்காண்டி மற்றும் அவர்களது உதவியாளர்கள் நான்கு நபர்கள் பங்கேற்று இப்பதிவு முகாம் வெற்றி பெற
பரிபூரண ஒத்துழைப்பு நல்கியது பாராட்டுக்குரியது.

அடுத்து இம்முகாமிற்கு இடமளித்து, உதவிபுரிந்த ரெட் ஸ்டார் சங்க பொறுப்பாளர்களான சகோதரர். செய்யது முஹம்மது ஜியா ( தலைவர்) சகோதரர். முஹம்மது காஸிம் (செயலர்), மற்றும் அதன் அங்கத்தினர்களான சகோதரர்கள் (Pharm. மெஹர் அலி, அப்துல் வாஹித் ஆகியோர்களும், ரெட் ஸ்டார் உறுப்பினர்களும் இம்முகாம் வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்பு நல்கினர்.
இம்முகாமில் சுமார் 700 குடும்பத்தினர் பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ். இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்து நடைபெறும் முகாம்களில் மனுதாரர்களின் புகைப்படம் எடுக்கவும் அதன் பின் ஸ்மார்ட் கார்டு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தகவல் :
ஷிஃபா நிர்வாகம்.
படங்கள் உதவி :
சுபான் A. பீர் முஹம்மது.
வாசகர்கள் கருத்து