ads



தமிழகத்தில் ரமலான் நோன்பு இன்று தொடக்கம் - தலைமை காஜி அறிவிப்பு

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

தமிழகத்தில் ரமலான் நோன்பு இன்று தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் வெளியிட்டுள்ளார். ரமலான் மாதத்தில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். பிறை தெரிவதை அடுத்து ரமலான் மாதம் தொடங்கும். இந்நிலையில், ரமலான் மாதம் தொடங்குவதற்கான பிறை தெரிந்ததைத் தொடர்ந்து நாளை முதல் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

திங்கள்கிழமை மாலை நாகப்பட்டிணம், ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வானில் பிறைநிலா தென்பட்டது. இதையடுத்து, ரமலான் மாதம் தொடங்குவதாகவும், இஸ்லாமிய மக்கள் நோன்புக்கு தயாராக வேண்டும் எனவும் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் நேற்று இரவு பிறை தெரிந்ததால் நேற்றுடன் ஷாபான் மாதம் முடிந்து நேற்று ரமலான் மாதம் துவங்கியுள்ளது.

7 Jun 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top