ads



மாவட்ட கால்பந்து லீக் போட்டி 2016 : ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
USC.jpg
மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கால்பந்து கழகத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் அதிக புள்ளிகள் பெறும் இரண்டு அணிகள் சூப்பர் நாக்கவுட் போட்டிகளுக்கு தகுதிபெறும், அப்போட்டியில் தூத்துக்குடி வட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகளுடன், திருச்செந்தூர் வட்டத்தில் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள் விளையாடும். அதில் வெற்றிபெறும் அணி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் வெற்றிபெற்று முதலிடம் பிடிக்கும் அணிகளுடன் சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்கும்.

இவ்வாண்டுக்கான லீக் போட்டிகள் கடந்த 6ஆம் தேதி துவங்கின. காயல் ஸ்போட்டிங் கிளப் (KSC) அணியினர் வீரபாண்டியன்பட்டணம் இளைஞர் அணியுடன் 3 - 0 என்ற கோல் கணக்கிலும், பட்டணம் Young அணியுடன் 3 - 0 என்ற கோல் கணக்கிலும், மார்காஷிஸ் கால்பந்து கழகம் - நாசரேத் "A" அணியினருடன் 1 - 0 என்ற கோல் கணக்கிலும், புனித ஜோஸப் கால்பந்து கழகம் - புன்னக்காயல் அணியினருடன் 2 - 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்றுள்ளார்கள். காயல் ஸ்போர்டிங் கிளப் அணியினர் தற்போதைய நிலவரப்படி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்கள்.

திருச்செந்தூர் வட்டத்தில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் (7 போட்டிகள்) விளையாடிய ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி புனித ஜோஸப் - புன்னக்காயல் அணியுடன் 4 - 0 என்ற கோல் கணக்கிலும், சாகுபுரம் DCW அணியுடன் 3 - 0 என்ற கோல் கணக்கிலும், வீரபாண்டியபட்டணம் இளைஞர் அணியுடன் 1 - 0 என்ற கோல் கணக்கிலும், காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணியுடன் 2 - 1 என்ற கோல் கணக்கிலும், வீரபாண்டிபட்டணம் Youngester அணியுடன் 1 - 0 என்ற கோல் கணக்கிலும், மர்காஷிஸ் கால்பந்து கழகம் - நாசரேத் "B" அணியுடன் 2 - 0 என்ற கோல் கணக்கிலும், மார்காஷிஸ் கால்பந்து கழகம் "A" அணியுடன் நடைபெற்ற போட்டியில் நடுவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நாசரேத் அணியினர் மைதானத்தைவிட்டு வெளியேறியதால், நடுவரால் ஐக்கிய விளையாட்டுச் சங்க அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
23 Mar 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top