ads



இறைவனிடம் குற்றவாளியாக நிற்க விரும்பவில்லை - எனது ஆட்சியில் எனது மகன்கள் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : சவுதிஅரேபிய அரசர் அறிவிப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
sal.jpg
இறைவனிடம் குற்றவாளியாக நிற்க விரும்பவில்லை, எனது ஆட்சியில் எனது மகன்கள் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதிஅரேபிய நாட்டின் மன்னர் சல்மான் பாரிஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

யாரும் எனது ஆட்சியில் அநியாயத்திற்கு உட்படுத்தபடுவதையும், அதனால் இறைவனுக்கு முன்னால் நான் குற்றவாளி ஆக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. நான் வாழும் இந்த காலத்தில், எனது ஆட்சியில் கீழ் உள்ள குடிமக்கள் பாதிக்கப்பட்டால், எந்ததுணையும் இல்லாமல் அவர் என்னை அனுகலாம். என்னிடம் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையிடலாம் அவருக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும்.

அப்படி முடியாதவர்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது எமது அரசின் இணையதளம் மூலமோ தமது புகாரை எமக்கு தெரியபடுத்தலாம். அல்லது தபால் நிலையங்கள் மூலம் எந்த கட்டணமும் இல்லாமல் தமது புகார்களை எனக்கு அனுப்பலாம் என்று அவர் கூறியுள்ளார்.

அப்படி அனுப்பப்படும் புகார்கள் எனது பிள்ளைகளுக்கு எதிராக இருந்தாலும், எனது பேரப்பிள்ளைகளுக்கு எதிராக இருந்தாலும், அவைகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீதி, நியாயத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் என்று மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல்-ஸவ்த் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நன்றி.
அரப் நியூஸ்.
19 Feb 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top