ads



பிப்:21 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
poliodrops.jpg
"இளம் பிள்ளை வாதம்" என்னும் கொடிய நோயில் இருந்து நமது குழந்தைகளை காத்திட போலியோ அற்ற உலகத்தை அமைத்திடுவோம் என்ற முழக்கத்துடன் 5 வயதுக்குற்பட்ட குழந்தைகளுக்கு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றது.

முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி காயல்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் 14 இடங்களில் நடத்தப்பட்டது. அதில் 2537 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக வருகின்ற 21/02 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஓடக்கரை சத்துணவு மையம், KTM தெரு பஞ்சாயத்து யூனியன் பள்ளி, YUF சங்கம், காயிதே மில்லத் சங்கம், கோமான் மேலத் தெரு பெண்கள் தைக்கா, கற்புடையார் வட்டம் தேவாளையம், துணை சுகாதார நிலையம் - கீழலெட்சுமி புரம், L.K. மேல்நிலைப் பள்ளி, ரெட் ஸ்டார் சங்கம், தீவுத் தெரு, பஞ்சாயத்து யூனியன் பள்ளி, கடையக்குடி - சத்துணவு மையம், அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம், அரசு மருத்துவமனை - காயல்பட்டினம் மற்றும் ரஃப்யாஸ் ரோஸரி மழழையர் பள்ளி ஆகிய 14 இடங்களில் நடைபெற உள்ளது.

ஐந்து வயதுக்குற்பட்ட குழந்தைகள் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் கலந்து கொள்ள வேண்டுமாய் தமிழக அரசின் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
19 Feb 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top