ads



அய்மான் சங்கம் சார்பில் உத்தம திருநபியின் உதயதின விழா! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பங்கேற்பு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
im2.jpg
அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் உள்ள இந்தியன் இஸ்லாமிக் சென்டர் ஆடிட்டோரியத்தில் உத்தம திருநபியின் உதயதின விழா நேற்றிரவு நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் கலந்துக்கொண்டு பேருரை நிகழ்த்தினார்.
im1.JPG
விழாவிற்கு அய்மான் சங்க தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார். மாணவர் அஹ்மத் நசீம் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைக்க, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ வரவேற்புரை நிகழ்த்தினார். அதிரை கவியன்பன் கலாம் கவிதை வாசித்தார்.

சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல்ரஹ்மான் ரப்பானி அறிமுக உரையாற்றினார். அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார், அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அய்மான் கல்லூரியின் முன்னாள் செயலாளர் கீழை சைய்யது ஜாஃபர் "அய்மானின் நினைவலைகள் ஓர் மீள் பார்வை" என்ற தலைப்பில் உரையாற்றினார். நபிகளாரின் சிறப்புக்களை பற்றி அய்மான் சங்க மார்க்கத்துறை முதன்மைச் செயலாளர் காயல் மௌலவி ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி ஹழ்ரத் சிறப்புரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்சனைகள் குறித்தும், அதை எதிர்கொள்ள நம்மை நாம் தயார்படுத்திக்கொள்வது குறித்தும், முஹல்லா ஜமாஅத்தின் ஒற்றுமையை வலியுறுத்தியும், மீலாது நபி விழாக்களை கொண்டாட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கி பேருரையாற்றினார்.

விழாவில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா, பொருளாளர் கீழை எஸ்.கே.எஸ். ஹமீதுர்ரஹ்மான், சார்ஜா மண்டல செயலாளர் தஞ்சை பாட்ஷா கனி, தஞ்சை வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் ஹாஜி முஹம்மது, எழுத்தாளர் வி.களத்தூர் கமால் பாட்ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.

நூல் வெளியீடு :

எழுத்தாளர் வி.களத்தூர் கமால் பாட்ஷா எழுதிய "ஷேக் ஜாயித் ஒரு சகாப்தம்" என்ற நூலை பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வெளியிட முதல் பிரதியை இந்திய முஸ்லிம் பேரவை தலைவர் அப்துல் காதர், இரண்டாம் பிரதியை இந்திய சமூக மைய உறுப்பினர் ஃபிர்தௌஸ் பாஷா, மூன்றாம் பிரதியை அமீரக தொழிலதிபர் லால்பேட்டை சிராஜுத்தீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அய்மான் சங்க செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை சல்மான் பாரிஸ் நன்றியுரை நிகழ்த்தினார். மௌலவி ஷர்ஃபுத்தீன் ஹழ்ரத்தின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
im3.jpg
விழாவில் இந்திய முஸ்லிம் பேரவை, அபுதாபி லால்பேட்டை ஜமாஅத், மௌலிது கமிட்டி, அமீரக காயிதேமில்லத் பேரவை, காயல் நல மன்றம், மர்ஹபா வெல்ஃபேர் அசோசியேஷன், துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள், சமுதாய பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவ - மாணவிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
31 Jan 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top