ads



தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ..நூற்றாண்டு விழாவில், சிறந்த வாழ் நாள் மருத்துவர் விருதுக்கு காயலர் டாக்டர் முஹம்மது தம்பி பெயர் பரிசீலிப்பு... சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, Chennai வர முடியாததால், டாக்டர் தம்பி விருதை மறுத்தார்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் நூற்றாண்டு விழ கொண்டாட்டம், 30 December 2015 அன்று கொண்டாடப்பட்டது .. நூற்றாண்டு விழாவை ஒட்டி, சிறந்த வாழ் நாள் மருத்துவர் விருதுக்கு பரிசீலிக்கப்பட்ட பெயர்களில், நமதூரை சேர்ந்த குழந்தை நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மது தம்பி பெயரும் இடம் பெற்று இருந்தது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின், தலைவர், எனது கல்லூரி சக தோழர் டாக்டர் பாலக்ருஷ்ணன், என்னை தொடர்பு கொண்டு, நாங்கள் டாக்டர் தம்பி சார் பெயரை, சிறந்த வாழ் நாள் மருத்துவர் விருதுக்கு பரிசீளித்து உள்ளோம். அவரால் 30 ஆம் தேதி அன்று விழாவில் கலந்துகொள்ள முடியுமா ? என்று கேட்டு சொல்ல சொன்னார்.

நானும் டாக்டர் தம்பி அவர்களை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, தொடர்பு கொண்டு, விஷயத்தை எடுத்து கூறி, அவரின் சம்மதத்தை கேட்டேன். தன் பெயரை பரிசீலனைக்கு எடுத்தமைக்கு நன்றி கூறி, விழா நடக்கும் நாளில், தனது குடும்ப திருமண விழா இருப்பதால், அன்று தன்னால் சென்னை, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், தான் கலந்து கொள்ளாமல், அந்த விருதை பெறுவதை தான் நியாயபடுத்த வில்லை என்று கூறி விட்டார்.

பலர் விருதுகளுக்கும், பதவிகளுக்கும் பின்னர் தேடி அலைவதை பார்த்து இருக்கிறோம். அனால் மருத்துவரோ, தனக்கு தேடி வந்த விருதை, தகுந்த காரணம் கூறி, மறுத்து, அந்த விருதை விட, ஒரு படி மேல் சென்று விட்டார்.
Dr.Thamby.jpg
டாக்டர் முஹம்மது தம்பி அவர்களுக்கு, சில வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாடு DR MGR மருத்துவ பல்கழை கழகத்தால், சிறந்த வாழ் நாள் சாதனையாளர் விருது கொடுத்து, கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
டாக்டர் த முஹம்மது கிஸார்.
31 Dec 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top