ads



அபுதாபி மௌலித் கமிட்டி சார்பாக மீலாது பெருவிழா திரளானோர் பங்கேற்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
அபுதாபி மௌலித் கமிட்டி சார்பாக கடந்த 22-12-2015 செவ்வாய் மாலை இந்தியன் இஸ்லாமிய மையத்தில் மீலாது பெருவிழா தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றது.
d2.JPG
மாலை 6:45 மணிக்கு சுப்ஹான மௌலித் ஓதப்பட்டு பின் காயல்பட்டிணம் SMB.ஹுஸைன் மக்கி ஹள்ரத் அவர்களின் தலைமையில் மீலாது பெருவிழா தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக லால்பேட்டை அப்துல் ரசீது ஹள்ரத் அவர்கள் திருமறையின் திருவசனங்களை ஓதினார்கள். திருவாவடுதுறை ஜூபைர் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து ஹூஸைன் மக்கி ஹள்ரத் அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள்.

தாய்ச்சபை பாடகர் தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜூதீன் ஃபைஜி அவர்கள் திருநபி புகழ்பாவும் பாடினார்கள்.

தாயகத்திலிருந்து வருகை தந்து பல்வேறு தலைப்புகளில் தொடர் சொற்பொழிவு நிகழ்த்திய சென்னை அடையாறு பெரிய ஜும்ஆ பள்ளி தலைமை இமாம் மௌலவி ஹாஃபிழ் M.சதீதுத்தின் பாகவி M.A, M.Phil ஹள்ரத் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் தொடர்ந்து அவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
d3.JPG
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீரகத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளின் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டது. அபுதாபி மௌலித் கமிட்டி சார்பாக நடத்தப்பட்ட பல போட்டிகளில் வெற்றி பெற்ற, வெற்றிக்கு முயன்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கபட்டது.

இறுதியாக இலங்கையை சார்ந்த ஹள்ரத் ஸபீர் அவர்களின் துஆவோடு, புனித யாநபி ஸலாம் பைத்துடன் நிறைவடைந்தது. விழாவில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளானவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இறைவனின் திருவருளையும், பிரபஞ்ச பேரருள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் துஆவையும் பெற்றார்கள். அனைவருக்கும் தப்ரூக் உணவு வழங்கபட்டது. இறுதியாக சென்னை காதர் மீரான் ஃபைஜி நன்றி கூறினார்.
d1.JPG
நிகழ்ச்சியை காயல்பட்டிணம் இஸ்ஹாக் லெப்பை மௌலவி, தமீம் அன்சாரி ஆகியோர் தொகுத்தளித்தார்கள். அபுதாபி மௌலித் கமிட்டியுடன், அய்மான் சங்கம், இந்தியன் இஸ்லாமிய பேரவை, அபுதாபி லால்பேட்டை ஜமாத் இணைந்து விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.

தகவல் மற்றும் புகைப்படம் :
சகோ. முதுவை ஹிதாயத்.
30 Dec 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top