ads



இறகுப்பந்து போட்டி 2015 : KSC உள்விளையாட்டு அரங்கில் நடபெற்ற LFC கோப்பையை அபூபக்கர் & இப்றாஹீம் இணை வென்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தின் உள்விளையாட்டு அரங்கில் கடந்த 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் நகர அளவிலான இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 20 அணிகள் பங்குபெற்றன, இந்த அணிகள் தலா 5 அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. அதில் வெற்றிபெற்ற அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. இறுதிப்போட்டிக்கு அபூபக்கர் & இப்றாஹீம் இணையும், அர்ஷத் & ஹம்தூன் இணையும் தகுதிபெற்றன.
IMG-20151228-WA0012.jpg
இப்போட்டியில் அபூபக்கர் & இப்றாஹீம் இணை வெற்றிபெற்று முதலாம் ஆண்டு LFC கோப்பையையும், ரூ.3500 மதிப்பில் LFC-ல் சாப்பிடுவதற்கான பரிசு கூப்பனையும் தட்டிச்சென்றது. இரண்டாவது இடத்தை அர்ஷத் & ஹம்தூன் இணை கோப்பையினையும் ரூ.2500 மதிப்பில் LFC-ல் சாப்பிடுவதற்கான பரிசு கூப்பனையும், மூன்றாம் இடம்பிடித்த இப்றாஹீம் & முஹம்மது மெய்தீன் இணைக்கு ரூ. 1500 மதிப்பில் LFC-ல் சாப்பிடுவதற்கான பரிசு கூப்பனையும் பெற்றது. சிறந்த இளம் வீரர்களாக அஹமது முஹைதீன் மற்றும் முஹம்து நூகு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
IMG-20151228-WA0011.jpg
இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக காயல் ஸ்போர்டிங் கிளப்பின் (KSC) தலைவர் அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர்ரஹ்மான், வாவு ஹபீபுல்லாஹ், வாவு அலி, கீழக்கரை காதர், M.B.S. சுலைமான், வாவு இப்றாஹீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
IMG-20151228-WA0014.jpg 
IMG-20151228-WA0016.jpg 
IMG-20151228-WA0015_1.jpg 
29 Dec 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

No more comments Allowed

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top