ads



புதுப்பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது! மார்க்க அறிஞர், நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு நாடு முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து காயல்பட்டினம் நகராட்சி சார்பில், நகரின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கட்டமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகின்றது.
1_2.JPG
இன்று (04/12) மொகுதூம் தெருவில் அமைந்துள்ள புதுப்பள்ளியில் நிலவேம்பு சகாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைவர் ஹாஜி S.M. உஸைர் தலைமை தாங்கினார், குத்பா பெரிய பள்ளியின் கத்திபு மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் H.A. அஹமது அப்துல் காதர் ஆலிம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து, "துஆ" பிராத்தனையும், ஒற்றுமையின் சிறப்பையும், அதனை வழியுறுத்தியும், சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
2_1.JPG
பின்னர் நிலவேம்பு குடிநீரை மௌலவி அவர்கள் வழங்க புதுப்பள்ளியின் தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். பின்னர் புதுப்பள்ளி தலைவர் அவர்கள், நகர்மன்ற தலைவருக்கு வழங்கினார்கள்.
4.JPG
அதனைத் தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்கள். இம்முகாமில் நேரடியாகவும், பாத்திரங்கள் மூலமும் 1000 நபர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
3.JPG
இந்நிகழ்வில் காயல்பட்டினம் நகராட்சியின் தலைவர் ஐ.ஆபிதா, 2-வது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.செய்யது முஹம்மது ஃபாத்திமா, 4-வது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி. முத்து ஹாஜரா, 5-வது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கிர், 6-வது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மது மெய்தீன், 9-வது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரியா, 10-வது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி. பதுருல்ஹக், 15-வது வார்டு உறுப்பினர் கே.ஜமால், 16-வது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ. சாமு சிஹாபுத்தீன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு. பொன்வேல்ராஜ், நகராட்சி மேளாலர் திரு. அறிவுச்செல்வன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
5 Dec 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top