ads



குழந்தைகள் தினநாளில் காயல்பட்டினத்தில் "குழந்தைகள் நல முகாம்" நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
நவ :14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் கே.வி.ஏ.டி அறக்கட்டளை, துளிர் அறக்கட்டளை மற்றும் அரிமா சங்கம் இணைந்து குழந்தைகள் நல முகாம் நடத்தியது.
DSC0108.jpg
நேற்று (14/11) காலை காயல்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள குளம் முஹம்மது தம்பி அவர்கள் இல்லத்தில் காலை 10:30 மணி முதல்  பிற்பகல் 02:00 மணி வரை குழந்தைகள் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பங்குபெற்ற திருநெல்வேலி ஷைன் மன இறுக்கம் மற்றும் கற்றல் குறைபாடு மையத்தின் மனநல மருத்துவர் திருமதி Dr. ஜீவா M.B.B.S., DPM., அவர்கள், தங்கள் குழந்தைகளுடன் முகாமிற்கு வந்திருந்த 30 பெற்றோர்களுக்கு இலவசமாக ஆலோசனைகளை வழங்கினார்.

அதன் பின்னர் வந்திருந்த குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு, சிறந்த ஓவியங்களுக்கு பரிகளும் வழங்கப்பட்டது.
1.jpg
மருத்துவர் அவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் மனநலம் பற்றிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்கள். இறுதியாக கே.வி.ஏ.டி. அறக்கட்டளையின் நிறுவனர், முகாமிற்கு வந்திருந்த மருத்துவர் மற்றும் அவரது குழுவினருக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.
2.jpg
இம்முகாமில் கே.வி.ஏ.டி புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் நிறுவனர் கே.வி.ஏ.டி ஜெய்னப் ரஹ்மத், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம். மும்பை முஹிதீன், துளிர் அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் அஹமத், அரிமா எம்.எல். சேக்கனா லெப்பை, கே.வி.ஏ.டி அறக்கட்டளையின் அறங்காவளர்களில் ஒருவரும், நகர்மன்ற உறுப்பினருமான கே.வி.ஏ.டி. முத்து ஹாஜரா, ஏ.ஹைரியா, இ.எம்.சாமி, லயன் எஸ்.ஏ. சாமு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
15 Nov 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top